twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிவி ஷூட்டிங்கில் பங்கேற்ற ஒருவர் கொரோனாவுக்கு பலி.. 8 பேருக்கு பாசிட்டிவ்.. யூனிட் அதிர்ச்சி!

    By
    |

    மும்பை: சின்னத்திரை படப்பிடிப்பில் பங்கேற்ற ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். 8 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் யூனிட் அதிர்ச்சி அடைந்துள்ளது.

    இந்தியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி டிவி தொடர் பாஹர்வாடி (Bhakarwadi).

    தேவன் போஜானி, பரேஸ் கனட்ரா, ஸ்மிதா சர்வாதே, பக்தி ரத்தோட் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    தலை நிறைய மல்லிப் பூ.. தழைய தழைய புடவை.. அசத்தல் லுக்கில் நயன்தாரா.. தீயாய் பரவும் போட்டோ! தலை நிறைய மல்லிப் பூ.. தழைய தழைய புடவை.. அசத்தல் லுக்கில் நயன்தாரா.. தீயாய் பரவும் போட்டோ!

    கொரோனா லாக்டவுன்

    கொரோனா லாக்டவுன்

    இந்த தொடருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு இருக்கிறது. இதற்கிடையே கொரோனா வைரஸ் தீவிரமானதால் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இருந்தும் இந்த வைரஸ் தொற்று அதிகமாகி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோம் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    எண்ணிக்கை அதிகரிக்கும்

    எண்ணிக்கை அதிகரிக்கும்

    இந்தியாவில், முதன் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. 750-க்கும் மேற்பட்டோர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக, கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

    சின்னத்திரை படப்பிடிப்பு

    சின்னத்திரை படப்பிடிப்பு

    இந்நிலையில் லாக்டவுன் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழகம், மகாராஷ்ட்ரா, தெலங்கானா உட்பட சில மாநிலங்கள், கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளன. இதையடுத்து இந்தியில் பல சீரியல்களின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பாஹர்வாடி என்ற காமெடி தொடரின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

    8 பேருக்கு பாதிப்பு

    8 பேருக்கு பாதிப்பு

    இதில் பங்கேற்ற ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி இதன் தயாரிப்பாளர் ஜேடி மஜிதியா கூறும்போது, 'கடந்த 11 ஆம் தேதி யூனிட்டை சேர்ந்த டெய்லர், காய்ச்சல் போல் இருக்கிறது. லீவு வேண்டும் என்று சென்றார். அவரிடம் எங்கள் யூனிட் தொடர்பில் இருந்தது.

    சிகிச்சை பெறுகிறார்கள்

    சிகிச்சை பெறுகிறார்கள்

    பின்னர் அவர் இறந்துவிட்டது தெரிந்து அதிர்ந்தோம். பிறகு எங்கள் யூனிட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், மூன்று நாட்கள் படப்பிடிப்பை ரத்து செய்தோம். கடந்த 26 ஆம் தேதி மீண்டும் தொடங்கினோம். யூனிட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.

    English summary
    'Bhakarwadi' staff member dies of coronavirus, 8 others test positive
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X