twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் எஸ்.எஸ். சந்திரன் உடல் தகனம் செய்யப்பட்டது

    By Sudha
    |

    SS Chandran
    சென்னை : மன்னார்குடியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மரணம் அடைந்த நடிகரும், முன்னாள் அதிமுக எம்.பியுமான எஸ்.எஸ்.சந்திரனின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

    700க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, வில்லன், குணச்சித்திரம் என பல்வேறு தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன். 67 வயதான சந்திரன், அதிமுகவில் துணை கொள்கைப் பரப்புச் செயலாளராக விளங்கினார்.முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் ஆவார்.

    மன்னார்குடியில் அதிமுக கூட்டத்திற்குப் போயிருந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு திரையுலகினர், அரசியல் கட்சியினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அவரது உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேரில் வந்து அஞ்சலி செலுத்தி மாலை அணிவித்தார்.

    அதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் பெரும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

    திரையுலகிலிருந்து நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ், விவேக், குண்டு கல்யாணம், சி.ஆர்.சரஸ்வதி, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    அதேசமயம், நடிகர் சங்கம் சார்பில் யாரும் வந்ததாக தெரியவில்லை.

    நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, எஸ்.எஸ்.சந்திரன் குறித்த ஒரு இரங்கல் பாடலை இயற்றி, அதை அவரது வீட்டு முன்பு நின்று பாடி மனம் உருகி பெரும் சோகத்துடன் அதை அவருக்கு காணிக்கையாக செலுத்தினார்.

    இதையடுத்து இன்றுகாலை இறுதிச் சடங்குகள் தொடங்கின. சந்திரனின் உடல் ஊர்லவமாக கண்ணம்மாப்பேட்டை மின்சார மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.

    தகனத்திற்கு முன்பு மயானத்தில் வைத்து அதிமுக சார்பி்ல் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக தலைவர்கள் பேசினர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X