ஏவிஎம் ராஜேஸ்வரி மரணம்; கருணாநிதி அஞ்சலி
தமிழ் சினிமாவின் முன்னோடி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களில் ஒருவரான ஏவி மெய்யப்ப செட்டியாரின் மனைவி ஏவிஎம் ராஜேஸ்வரி நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87.
நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருந்தார் ராஜேஸ்வரி அம்மாள்.
ஏவிஎம் முருகன், ஏவிஎம் குமரன், எவிஎம் சரவணன், ஏவிஎம் பாலசுப்பிரமணியன் ஆகிய நான்கு மகன்கள் மற்றும் மகள் மீனாவுடன்ன் சென்னையில் வசித்தார் ராஜேஸ்வரி அம்மாள்.
ராஜேஸ்வரி அம்மாள் அறக்கட்டளை சார்பில் பலவேறு உதவிகளைச் செய்து வந்தார் அவர்.
முன்னதாக ஏவிஎம் ராஜேஸ்வரி அம்மாள் உடலுக்கு முதல்வர் மு.கருணாநிதி, அவரது துணாவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், நடிகர் சரத்குமார், ராதிகா, நெப்போலியன் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
ராஜேஸ்வரி அம்மாளின் இறுதிச் சடங்கு இன்று சென்னையில் நடந்தது.


Click it and Unblock the Notifications











