ஏவிஎம் என்றால் இளக்காரமா?- நீக்கப்பட்ட நா முத்துக்குமார்

ஆனாலும் யாராக இருந்தாலும் படம் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு ஏவிஎம் வளாகத்துக்குள்தான் வர வேண்டுமே தவிர, இவர்களாக யாரையும் தேடிப் போவதில்லை. சூப்பர் ஸ்டார் கூட இதற்கு விலக்கல்ல.
தங்கள் நிறுவனத்துக்கென்றுள்ள இந்தப் பாரம்பரியத்தை மாற்றக் கூடாது என்பதால் அதை அப்படியே தொடர்கிறார்கள்.
அயன் படத்துக்குப் பிறகு இந்த நிறுவனம் தயாரிக்கும் படம் முதல் இடம். புதிய இயக்குநர் டி குமரன் இந்தப் படத்தை இயக்குகிறார். இமான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு பாடல் எழுத முத்துக்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
ஆனால் கம்போசிங்குக்கு வருமாறு அழைத்தபோது, இயக்குநர் புதியவர்தானே... என்னுடைய அலுவலகத்துக்கு அவரை வரச்சொல்லுங்கள் என்றாராம் முத்துக்குமார்.
விஷயம் ஏவி எம் சரவணன் காதுக்குப் போனது. முத்துக்குமார் வேண்டாம். வேறு யாரையாவது வைத்து எழுதுங்கள் என்று உத்தரவிட்டுவிட்டாராம் சிம்பிளாக.


Click it and Unblock the Notifications











