விஜய் வழக்கு ஒத்திவைப்பு!

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த கார்வண்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தங்களது நிலம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் நடிகர் விஜய்க்கு முறைகேடாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீட்டு தருமாறும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜோதிமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நடிகர் விஜய் தரப்பில் ஆஜரான வக்கீல் இளங்கோ, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி 18-ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
Comments
தள்ளி வைப்பு நிலம் ஒதுக்கீட்டு விவகாரம் முறைகேடு வழக்கு விஜய் high court housing board postponed vijay


Click it and Unblock the Notifications