அழுகைக்கு டாடா... இனி ஆக்ஷன்தான்! - சேரனின் புது அவதாரம்

பொக்கிஷம் படத்துக்குப் பிறகு படங்கள் இயக்குவதை தற்காலிகமாக ஒத்திப் போட்டுள்ள சேரன், தன்னை ஒரு வெற்றிகரமான ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வெறியோடு இந்தப் படத்தில் மிஷ்கினுடன் கைகோர்த்துள்ளார்.
நந்தலாலா வரும்போது வரட்டும் என்று, மிஷ்கினும் தனது 'கோடம்பாக்க யுத்த'த்தை ஆரம்பித்துவிட்டார்.
யுத்தம் செய் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.
தீபா ஷா என்ற புதுமுகம் இதில் நாயகியாக அறிமுகமாகிறார். இவரைத் தவிர யுகேந்திரன், லட்சுமி போன்றவர்களும் நடிக்கிறார்கள்.
ஒய் ஜி மகேந்திரனுக்கு மிக முக்கிய வேடம் தந்திருக்கிறார் மிஷ்கின், இந்தப் படத்தில்.
இதில் ஒளிப்பதிவாளராக சத்யாவை அறிமுகப்படுத்துகிறார் மிஷ்கின். சித்திரம் பேசுதடி படத்தின் ஆர்ட் டைரக்டர் அமரன் இந்தப் படத்திலும் பணியாற்றுகிறார். கே என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
மக்கள் தொடர்பு நிகில்.
கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications











