தீபிகா, பன்சாலியின் தலையை வெட்டுபவருக்கு ரூ. 10 கோடி பரிசு: மூத்த பாஜக நிர்வாகி அறிவிப்பு

By Siva

சன்டிகர்: தீபிகா மற்றும் இயக்குனர் பன்சாலியின் தலையை வெட்டுபவருக்கு ரூ. 10 கோடி அளிக்கப்படும் என்று பாஜக நிர்வாகி ஒருவர் அறிவித்துள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தில் ராணி பத்மினியை அவமதித்து வரலாற்றை திரித்துள்ளதாக சில அமைப்புகள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தி வருகின்றன.

போராட்டங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தீபிகா

தீபிகா

தீபிகா, பன்சாலியின் தலையை வெட்டுபவருக்கு ரூ. 10 கோடி பரிசு அளிக்கப்படும் என்று ஹரியானாவை சேர்ந்த பாஜக தலைமை செய்தி ஒருங்கிணைப்பாளர் சுராஜ்பால் அமு தெரிவித்துள்ளார்.

கால்

கால்

பத்மாவதி படத்தில் அலாவுத்தீன் கில்ஜியாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் கால்களை ஒடிக்க வேண்டும். சஞ்சய் லீலா பன்சாலியிடம் ரூ. 3 கோடி கூட இல்லை. அவருக்கு எப்படி ரூ.300 கோடி கிடைத்தது? மோடிஜி நீங்கள் பேச வேண்டும் என்று அமு கூறியுள்ளார்.

ரூ. 5 கோடி

ரூ. 5 கோடி

தீபிகா மற்றும் பன்சாலியின் தலையை வெட்டுபவருக்கு ரூ. 5 கோடி பரிசு அளிக்கப்படும் என்று மீரட்டை சேர்ந்த நபர் ஒருவர் முன்பு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக

பாஜக

தீபிகாவின் தலையை வெட்ட பரிசு அறிவித்ததற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமுவுக்கு பாஜக தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரின் அறிவிப்புக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X