கொலை மிரட்டல்: இயக்குநர் ஹரி புகார்!

By Sudha

Director Hari
சினிமா சம்பவங்களை மிஞ்சும் அளவுக்கு நாளும் ஒரு புதிய திருப்பங்களுடன் போகிறது விஜயகுமார் குடும்ப தகராறு. யாரும் எந்த வகையிலும் சமாதானமாகாமல், ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர். இந்த பரபரப்பில் இப்போது விஜயகுமாரின் மருமகனும் இயக்குநருமான ஹரியும் இணைந்துள்ளார்.

சமீபத்தில் வனிதா போலீசாரிடம் கொடுத்த புகாரில், அடியாட்கள் சிலர் வனிதா வீட்டுக்கு சென்றதாகவும், அவரது குழந்தைகளை கொலை செய்ய முயன்றதாகவும் கூறி இருந்தார்.

"இந்த அடியாட்களை இயக்குநர் ஹரி அனுப்பி இருக்கலாம். தனது தந்தை விஜயகுமாருக்கு ஆதரவாக ஹரி செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது சந்தேகம் உள்ளது," என்றும் வனிதா புகாரில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சென்னை சாலி கிராமத்தில் குடியிருக்கும் ஹரியின் தம்பி கார்வண்ணராஜா விருகம்பாக்கம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், "நேற்று இரவு 10 மணி அளவில் என் வீட்டுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் இயக்குநர் ஹரியை அமைதியாக இருக்கச் சொல். இல்லை என்றால் கொலை செய்து விடுவோம்" என்று மிரட்டி விட்டு போனை துண்டித்து விட்டார்.

காலர் ஐ.டி.யில் பதிவான நம்பருக்கு மீண்டும் தொடர்பு கொண்டபோது, அது எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள பிசிஓ போன் மூலம் யாரோ பேசியது தெரிய வந்துள்ளது. போனில் மிரட்டிய குற்றவாளியை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்..." என்று கூறப்பட்டுள்ளது.

புகார் குறித்து விருகம் பாக்கம் போலீஸ் இன்ஸ் பெக்டர் ஞானசேகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

மதுரவாயல், விருகம்பாக்கம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், பரங்கிமலை புறநகர் கமிஷனர் அலுவலகம், பூந்தமல்லி கோர்ட், உயர்நீதிமன்றம் என சென்னை மற்றும் புறநகர் போலீஸ் நிலையங்கள், கோர்ட்டுகளை ரவுண்டு கட்டி அடிக்கிறது விஜயகுமார் குடும்ப வழக்குகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X