twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் பட நஷ்ட விவகாரத்தில் தயாரிப்பாளர்களுக்கு அடி உதை... 'கவுன்சில்' கலாட்டா!

    By Sudha
    |

    விஜய் பட நஷ்டம் தொடர்பான காரசார விவாதத்தால் தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் இரு தயாரிப்பாளர்கள் அடித்துக் கொண்டனர்.

    சென்னையில் நேற்று நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில், 400-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள். ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை மேடையில் எடுத்துரைத்தார்கள்.

    அய்யப்பன் என்ற தயாரிப்பாளர் பேசிக்கொண்டிருந்தபோது, விஜய் பட நஷ்டம் குறித்துப் பேசினார். சுறா, வேட்டைக்காரன், தில்லாலங்கடி, வெளுத்துக்கட்டு, தீராத விளையாட்டு பிள்ளை உட்பட 26 படங்களை வாங்கி வெளியிட்டதில் 14 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    உடனே, மதுரை பொண்ணு சென்னைப் பையன் என்ற படத்தின் தயாரிப்பாளர் முத்துபாரதி எழுந்து, "படத் தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டம் குறித்து தான் இங்கு பேச வேண்டும், படத்தை வாங்கி வெளியிட்டது குறித்து குறை கூறுகிறீர்கள். நீங்கள் படங்களை வெளியிட்டதற்கும், இந்த கூட்டத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது", என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அய்யப்பனுக்கும், முத்து பாரதிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், முத்து பாரதிக்கு அடி-உதை விழுந்தது. இவர், வேலு தேவன் பிலிம்ஸ் சார்பில் 'மதுரை பொண்ணு சென்னை பையன்' என்ற படத்தை தயாரித்தவர். இந்திய ஜனநாயக கட்சியில் அமைப்பு செயலாளராக இருக்கிறார்.

    உடனே கோபத்தில், தமிழக அரசின் நல வாரிய அடையாள அட்டையை வீசி எறிந்து, ஆவேசமாக சண்டை போட்டார். மற்ற தயாரிப்பாளர்கள் இருவரையும் வெளியில் அனுப்பினர். வெளியிலும் மோதல் தொடர்ந்தது.

    இதுகுறித்து முத்துபாரதி கூறுகையில், "தயாரிப்பாளர் கூட்டத்தில் விநியோகஸ்தர் அய்யப்பனுக்கு என்ன வேலை? அவரை எனக்கு விநியோகஸ்தராகவே தெரியும். எந்தப் படமும் தயாரிக்கவில்லை. திமுக அனுதாபி என்ற ஒரே காரணத்தில் இஷ்டத்துக்கும் பேசினார். அவருக்கு எதிராக கருத்து சொன்னதால் ஆத்திரப்பட்டு அவர் என்னை பாய்ந்து தாக்கியதால்தான் கைகலப்பு ஏற்பட்டது.

    மேலும் திரைப்படக் கலைஞர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் சரியான முறையில் ஒதுக்கப்படவில்லை. இதுவே எம்.ஜி.ஆர்., இருந்திருந்தால் இலவசமாக அந்த இடத்தை கொடுத்திருப்பார் என்று நான் முன்பு கூறியிருந்தேன். இதில் அய்யப்பனுக்கு கோபம். இந்த கூட்டத்தை பயன்படுத்தி சண்டைக்கு வந்திருக்கிறார்...", என்றார்.

    English summary
    A meeting of the powerful Tamil Film Producer's Council on Sunday ended on a stormy note as two groups owing allegiance to different political parties fought. During the meet, Muthu Barathi and Ayyappan, two members of the council clashed with each other and expelled from the meeting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X