ரஜினி பிறந்த நாள்: 60 குடும்பங்களுக்கு இலவச எல்ஐசி பாலிசி!!
ரஜினி பிறந்த நாளையொட்டி 60 குடும்பங்களுக்கு இலவச இன்சூரன்ஸ் பாலிஸி எடுத்துக் கொடுத்துள்ளார் வேலூர் மாவட்ட ரஜினி மன்ற பொருளாளர் சோளிங்கர் என் ரவி.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 60வது பிறந்த நாள் நாளை மறுதினம் வெகு விமரிசையாக அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. மாவட்டந்தோறும் விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் பொருளாளர் சோளிங்கர் என் ரவி, தனது சொந்த செலவில் பல நலத் திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
ரஜினியின் 60 வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் 'ரஜினி 60' எனும் சிறப்பு மலரை வெளியிட்டுள்ளார். 60 பக்கங்கள் கொண்ட இந்த மலரை விகடன் பதிப்பகம் வெளியிடுகிறது. இயக்குநர் கே பாலச்சந்தர் இதற்கு முன்னுரை வழங்கியுள்ளார்.
எல்ஐசி பாலிஸி...
சோளிங்கர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 60 ஏழைக் குடும்பத்தைச் தேர்வு செய்து அவர்களுக்கு 60 எல்ஐசி பாலிஸிகளை எடுத்துக் கொடுத்துள்ளார் ரவி. இந்த 60 பாலிஸிகளுக்கும் முதல் பிரிமியம் தலா ரூ 600ஐயும் அவரே செலுத்தியுள்ளார்.
இதுதவிர, 6000 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
ரஜினி பிறந்த நாள் மலர் வெளியீடு, மரக்கன்று நடும் விழா மற்றும் உதவிகள் வழங்கும் விழாவை சோளிங்கரில் பெரிய திருவிழாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார் ரவி ரசிகர்கள் துணையுடன்.
ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க


Click it and Unblock the Notifications











