கிரகலட்சுமி அப்பீல் தள்ளுபடி!

நடிகர் பிரசாந்திற்கும் கிரகலட்சுமிக்கும் கடந்த 2005-ல் திருமணம் நடந்தது. பல காரணங்களால் இருவரும் பின்னர் பிரிந்தனர்.
அப்போதுதான் கிரகலட்சுமி ஏற்கனவே திருமணமானவர், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார், எனவே இந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று பிரசாந்த் சார்பில் குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல கோர்ட்டு அவர்களது திருமணத்தை செல்லாது என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கிரகலட்சுமி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.
'குடும்ப நல கோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதித்து, அதை ரத்து செய்ய வேண்டும்' என்றும் கோரியிருந்தார்.
இவ்வழக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் ரவிராஜ பாண்டியன், ஜனார்த்தன ராஜா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பிரசாந்த் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குடும்ப நல கோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தர விட்டனர்.


Click it and Unblock the Notifications











