பாலா வீட்டு முன் தண்டோரா போட தடை!

நடிகர் ஆர்யா, நடிகை பூஜா நடித்த நான் கடவுள் படத்தை பாலா இயக்கினார். வாசன் விஷுவல்ஸ் சார்பில் சீனிவாசன் தயாரித்தார். இப்படத்தில் ஊனமுற்றோரை இழிவுப்படுத்தி இருப்பதாக கூறி தமிழ்நாடு ஊனமுற்றோர் சங்க துணைத் தலைவர் கோபிநாத் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்யாத இயக்குநர் பாலா, சீனிவாசன் ஆகியோர் வீட்டு முன்பு தண்டோரா அடிக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து பாலா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகர், பாலா வீட்டு முன்பு தண்டோரா அடிக்க இடைக்கால தடை விதித்தார்.
Comments


Click it and Unblock the Notifications