நடிகை ஹேமமாலினி வீட்டில் நடந்த கொள்ளை- ஐவர் கும்பல் சிக்கியது

மும்பையில் உள்ள ஹேமமாலினியின் வீட்டுக்குள் சமீபத்தி்ல புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த ரூ. 80 லட்சம் மதிப்புள்ள நகை, பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தார் ஹேமமாலினி.
மும்பை போலீஸார் தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர். இந்த வேட்டையில் தற்போது ஐந்து பேர் கைதாகியுள்ளனர்.
இவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை போலீஸார் மீட்டுள்ளனர். அவர்களில் ஒருவரிடமிருந்து ரூ. 93,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர சில ஆயுதங்களும் கூட இந்தக் கும்பலிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் இணை கமிஷனர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications