கோலிவுட் ரசிகர்களை மிரட்ட வரும் 10 பேய் படங்கள்

By Siva

சென்னை: பேய் படங்கள் மீது ஆர்வம் காட்டும் ரசிகர்களை மிரட்ட 10 பேய் படங்கள் வருகின்றன.

ரசிகர்களுக்கு ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான படங்கள் பிடிக்கும். அண்மை காலமாக ரசிகர்களுக்கு பேய் படங்கள் மிகவும் பிடித்துள்ளன. ராகவா லாரன்ஸ் முனி படத்தை எடுத்து வெற்றி கண்டு அதன் இரண்டாம் பாகமான காஞ்சனாவிலும் கல்லா கட்டினார். யாவரும் நலம், யாமிருக்க பயமேன் படங்களும் நன்றாக ஓடின.

10 horror movies in the pipeline

விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த பீட்சா படமும் ஹிட்டானது. இதை பார்த்து பீட்ஸாவை இந்தியில் ரீமேக் செய்து வெளியிட்டனர். அந்த அளவுக்கு தமிழ் பேய் படங்கள் பாலிவுட்காரர்களையும் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் சுந்தர் சி. இயக்கத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த அரண்மனை படமும் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டுள்ளது.

இதை பார்த்த தயாரிப்பாளர்கள் பேய் படங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது தமிழில் 10 பேய் படங்கள் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X