கஜினி படத் தயாரிப்பாளர் மீது வழக்கு நடத்தத் தடை!

இந்தி கஜினி பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், உதவி இயக்குனர் சம்பத்குமார் மற்றும் மது ஆகிய 4 பேர் மீது , தமிழ் கஜினி பட தயாரிப்பாளர் சந்திரசேகர் சேலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
அதில், 'போலி ஒப்புதல் ஆவணம் தயாரித்து இந்தி கஜினி படத்தை தயாரித்துள்ளனர், என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அல்லு அரவிந்த் உட்பட 4 பேரும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஸ்ரீராம்பஞ்சு, சிவராமன் ஆஜராயினர். மனுவை நீதிபதி கே.என்.பாஷா நேற்று விசாரித்தார். இந்தி கஜினி பட தயாரிப்பாளர் உட்பட 4 பேர் மீது சேலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடக்கும் வழக்குக்கும், சம்மனுக்கும் தடைவிதித்தார்.


Click it and Unblock the Notifications











