twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியின் அரசியலை கேலி செய்து காட்சிகள்.. ஜிவி பிரகாஷ் படத்தில் இருந்து 10 நிமிட காட்சிகள் நீக்கம்!

    |

    சென்னை: ஜிவி பிரகாஷின் படத்தின் நடிகர் ரஜினிகாந்தின் அரசியலை கேலி செய்து வைக்கப்பட்ட காட்சிகளை தணிக்கை குழு நீக்கியுள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் 2008ஆம் ஆண்டு வெளியான குசேலன் படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்தார்.

    மாலத்தீவில் மாஸ்க் அணியாத பிரபலங்கள்...வறுத்தெடுத்த ஸ்ருதிஹாசன்...குவியும் ஆதரவு மாலத்தீவில் மாஸ்க் அணியாத பிரபலங்கள்...வறுத்தெடுத்த ஸ்ருதிஹாசன்...குவியும் ஆதரவு

    அதனை தொடர்ந்து டார்லிங் படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார் ஜிவி பிரகாஷ். தொடர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

    அடங்காதே..

    அடங்காதே..

    அதேநேரத்தில் இசையமைக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். தற்போது காதலிக்க யாருமில்லை. பேச்சுலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அடங்காதே என்ற படத்தில் நடித்துள்ளார்.

    சர்ச்சை காட்சிகள்

    சர்ச்சை காட்சிகள்

    இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார்.
    இந்நிலையில் அடங்காதே படத்தை சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் நடிகர் ரஜினி கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஷயங்களை விமர்சிப்பது போன்ற சர்ச்சை காட்சிகள் படத்தில் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தணிக்கை குழு அதிருப்தி

    தணிக்கை குழு அதிருப்தி

    ரஜினி தரப்பில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்ததாக கூறப்பட்ட கட்சி பெயரையும் படத்தில் குறிப்பிட்டு இருந்ததாக தணிக்கை குழு அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் படத்துக்கு சான்றிதழ் அளிக்கவும் மறுத்தனர்.

    ரஜினியை கேலி செய்து

    ரஜினியை கேலி செய்து

    இந்நிலையில் அடங்காதே படக்குழுவினர் மறு தணிக்கைக்கு படத்தை கொண்டு சென்றனர். அங்கும் ரஜினிகாந்த் அரசியலை கேலி செய்வது போன்ற காட்சிகள் படத்தில் இருப்பதாகவும், அதனை நீக்க வேண்டும் என்றும் தணிக்கை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    கட்சி பெயரை நீக்கினர்

    கட்சி பெயரை நீக்கினர்

    ஆனால் ரஜினிகாந்த் பதிவு செய்ததாக சொல்லப்படுவதற்கு முன்பே படம் எடுத்து விட்டோம் என்றும் குறிப்பிட்ட யாரையும் படத்தில் விமர்சிக்கவில்லை என்றும் படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். அதை ஏற்காத தணிக்கை குழுவினர் கட்சி பெயரை படத்தில் இருந்து நீக்கினர்.

    10 நிமிட காட்சிகள்

    10 நிமிட காட்சிகள்

    அதோடு இதேபோல் 10 நிமிடங்களுக்கு மேல் உள்ள 100-க்கும் மேற்பட்ட சர்ச்சை காட்சிகளை வெட்டி துக்கி விட்டு அடங்காதே படத்திற்கு யூ-ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். அடங்காதே படத்தின் 10 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    English summary
    10 Minutes scenes removed in GV prakash movie. GV prakash staring Adangathe movie trolls Rajinikanth's politics.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X