தியாகராஜ பாகவதர் பேத்திக்கு தயாரிப்பாளர் சங்கம் உதவி!

By Chakra

Film producer council helps MKT Bagavathar's grand daughter
ஏழிசை மன்னர் என்று புகழப்பட்டவர் மறைந்த தியாகராஜ பாகவதர். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமைக்குரியவர். ஆனால் பெயரும் பெருமையுதான் அவருக்கு மிஞ்சியது. அவரது குடும்பத்தினருக்கோ வறுமை மட்டுமே எஞ்சியது.

பாகவதரின் மகள் வயிற்றுப் பேத்தி மீனா. இவர் மிகவும் வறுமையில் வாடுவதை அறிந்த வாரப் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர், அவருக்கு உதவி செய்ய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு கோரிக்கை வைத்தார்.

கோரிக்கையைப் பரிசீலித்த சங்கத்தின் தலைவர் ராம நாராயணன், உடனடியாக மீனாவை தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரவழைத்தார்.

ரூ 50000 -ஐ உதவித் தொகையாக மீனாவுக்கு வழங்கினார் ராம நாராயணன்.

பெப்ஸி தலைவர் குகநாதன், நடிகர் சங்க செயலாளர் ராதாரவி, தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சிவசக்தி பாண்டியன், அன்பாலயா பிரபாகரன், கேஎஸ் சீனிவாசன், விஜயமுரளி ஆகியோர் இந்த நிகழ்வின்போது உடனிருந்தனர். எதிர்காலத்தில் மேலும் உதவி வழங்குவதாகவும் மீனாவுக்கு ஆறுதல் கூறினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X