பிரகாஷ் ராஜ் படத்துக்கு தடை கோரி வழக்கு!
பிரகாஷ்ராஜ், நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ள பயணம் படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகியுள்ளது. பிரகாஷ் ராஜே தயாரித்துள்ளார். அழகிய தீயே, மொழி, அபியும் நானும் படங்களைத் தொடர்ந்து பிரகாஷ் ராஜும் ராதாமோகனும் இணைந்துள்ள படம் இது.
தீவிரவாதிகள் விமானம் கடத்துவதை கருவாகக் வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழகமெங்கும் நாளை ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்துக்கு தடை விதிக்க கோரி மகேந்திரகுமார் ஜெயின் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், "திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான பிரகாஷ் ராஜ் அபியும் நானும் படத்துக்கு என்னிடம் பல்வேறு தேதிகளில் கடனாக ரூ.79.99 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதை திருப்பி தரவில்லை. அவர் தயாரிப்பில் வந்துள்ள பயணம் படத்தின் காப்பிரைட் உரிமையை எனக்கு அளிப்பதாகவும் படத்தை திரையிடுவதற்கு முன் எனக்கு அளிக்க வேண்டிய கடன் தொகையை தருவதாகவும் கடந்த 31.3.10-ல் ஒப்பந்தம் செய்தார்.
ஆனால் ஒப்பந்தபடி அவர் செயல்படவில்லை. இது தொடர்பான எனது கடிதங்களுக்கும் பதில் தரவில்லை. எனவே பயணம் படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்", என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











