இயக்குனர் சங்கம் மூலம் இனி உதவி இயக்குநர்களுக்கு சம்பளம் - தொடங்கி வைத்தார் கருணாநிதி

By Staff

இயக்குனர் சங்கம் மூலம் இனி உதவி இயக்குநர்களுக்கு சம்பளம் - தொடங்கி வைத்தார் கருணாநிதி

சென்னை: இயக்குனர் சங்கம் மூலம் உதவி இயக்குனர்களுக்கு ஊதியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

தமிழ்த் திரையுலகில் புதிய அணுகுமுறையாக திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு வழங்கக்கூடிய ஊதியங்களை இயக்குநர்கள் சங்கத்தின் மூலமாக வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

பெண் சிங்கம் திரைப்படத்தின் இயக்குநர் பாலி ஸ்ரீரங்கம், உதவி இயக்குநர்கள் குணா, அரங்கன், முல்லை, குருமூர்த்தி, சுப்பிரமணியம் உள்ளிட்டோருக்கு ஊதியத்தை வழங்கி கருணாநிதி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் குமரா திரைப்படத்தின் இயக்குநர் டி.கே. சண்முகசுந்தரம், உதவி இயக்குநர்கள் ராம்மோகன், முரளி; திருத்தணி திரைப்படத்தின் இயக்குநர் பேரரசு, உதவி இயக்குநர்கள் ஸ்ரீதர், மனோகர். மாப்பிள்ளை திரைப்படத்தின் இயக்குநர் சுராஜ், உதவி இயக்குநர்கள் ராஜதுரை, எஸ்.ஆர்.சூரியன் ஆகியோரும் கருணாநிதி மூலமாக சம்பளம் பெற்றனர்.

நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, செயலாளர் ஆர்.கே. செல்வ மணி, துணைத்தலைவர் விக்ரமன், இணைச் செயலாளர்கள் அமீர், ஏகம்பவாணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X