எதிர்பார்ப்பை தூண்டும் படங்கள் … 2022ம் ஆண்டு வெளியாக உள்ள திரைப்படங்களில் டாப் லிஸ்ட் !
சென்னை : வீறுகொண்டு எழுந்த கொரோனா என்னும் கொடிய அரக்கனால் 2020 மற்றும் 2021ம் ஆண்டு திரைத்துறை துவண்டு போனது.
தற்போது, புத்துயிர் பெற்று மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
அஜித், சூர்யா, விஜய், விஜய் சேதுபதி என அனைத்து பெரிய நட்சத்திரங்களின் படங்களும் 2022ம் ஆண்டு வெளியாக உள்ளன.

வலிமை
எச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு ஜனவரி 13, 2022 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கோப்ரா
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இப்படம் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாகும். இப்படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிதா, இர்பான் பதான் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பீஸ்ட்
நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் பீஸ்ட் . இதில் விஜய், பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் சமீபத்தில் 100 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளது. 2022ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன்
1955ல் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம், இளங்கோ குமரவேல், ஜெயமோகன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஜெயரா, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து அவரது தயாரிப்பான மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் இணைந்து தயாரிக்கிறது. இரண்டு பாகமாக வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் 2022ம் ஆண்டு வெளியாக உள்ளது.

விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் விக்ரம். ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான இப்படத்தை ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், நரேன், அர்ஜுன் தாஸ், ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளது.

எதற்கும் துணிந்தவன்
சூர்யா மற்றும் பிரியங்கா அருள் மோகன் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படமாகும். பாண்டியராஜன் இயக்கி வரும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய் ராய், சூரி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைத்துள்ள இப்படம், 2022ம் ஆண்டு பிப்ரவரி 4ந் தேதி வெளியாக உள்ளது.

மாறன்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் மாறன். புலனாய்வு த்ரில்லர் திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகி உள்ளது. இத்திரைப்படம் இன்னும் படப்பிடிப்பில் உள்ளது மற்றும் முடியும் தருவாயில் உள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம் 2022ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டான்
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், சிவாங்கி கிருஷ்ணகுமார், எஸ்.ஜே.சூர்யாஜ், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படமும் 2022ம் ஆண்டு வெளியாக உள்ளது.

கேஜிஎஃப் 2
கேஜிஎஃப் 2, யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் பல மொழிகளில் வெளிவரவிருக்கும் ஆக்ஷன் திரைப்படமாகும். இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். இது 2018 இல் வெளியான கேஜிஎஃப் 1 திரைப்படத்தின் தொடர்ச்சி. கன்னட இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையை அமைக்கிறார். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 14 ஏப்ரல் 2022 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

மகான்
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோவின் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோருடன் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் 2022 ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications