»   »  ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் மரணம் - கேபி, கமல் அஞ்சலி

ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் மரணம் - கேபி, கமல் அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil
B S Loknath
சென்னை: பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.

அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை, மரோசரித்ரா (தெலுங்கு), ஏக் துஜே கேலியே (இந்தி), நினைத்தாலே இனிக்கும் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், பி.எஸ்.லோகநாத். கே.பாலசந்தர் இயக்கிய செய்த 55 படங்களுக்கு, இவர் ஒளிப்பதிவு செய்தவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதல் ஷாட் வைத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

பி.எஸ்.லோகநாத், சென்னை கே.கே.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல், நேற்று காலை 5.30 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.

அவருடைய உடலுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார், பார்த்திபன், டைரக்டர் கே.பாலசந்தர் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகு அவருடைய உடல் மாலை 5.30 மணிக்கு கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மறைந்த பி.எஸ்.லோகநாத்துக்கு ராதா என்ற மனைவியும், 2 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர்.

English summary
Veteran cinematographer B S Loknath, who worked with K Balachander for morethan 55 movies has been passed away in Chennai due to severe cardiac arrest.
Please Wait while comments are loading...