twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செக் மோசடி வழக்கு: லதா, சவுந்தர்யா மீது காலையில் பிடிவாரன்ட்.. மாலையில் ரத்து!

    By Shankar
    |

    Soundarya Rajinikanth
    செக் மோசடி வழக்கில் ரஜினியின் மனைவி லதா மற்றும் மகள் சவுந்தர்யாவுக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கோர்ட்டுக்கு வெளியே விவகாரம் பேசி முடிக்கப்பட்டதால், வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

    சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்த சுமர்சந்த் பாப்னா, சுவஸ்திக் பைனான்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிதி நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார்.

    நடிகர் ரஜினியின் மனைவி லதா, மகள் சவுந்தர்யா இருவரும், சுமர்சந்த் பாப்னாவிடம், ஆக்கர் ஸ்டுடியோ பெயரில் சுல்தான் தி வாரியர் படத்துக்காக 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர். கடன் பணத்திற்காக, சுமர்சந்த் பாப்னாவிடம் லதா, சவுந்தர்யா சார்பில், காசோலை கொடுக்கப்பட்டது.

    அந்த, செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கு இருவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதையடுத்து, சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் லதா, சவுந்தர்யா இருவர் மீதும் சுமர்சந்த் பாப்னா, செக் மோசடி வழக்கு தொடுத்தார்.

    வழக்கு விசாரணைக்கு கடந்த மாதம் 6ம் தேதி இருவரும் ஆஜராக வேண்டும் என அவர்களுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், இருவரும் ஆஜராகவில்லை.

    இவ்வழக்கு, விசாரணைக்கு வந்தது. லதாவும் சவுந்தர்யாவும் நீதிமன்றத்தில் ஆராகத் தவறியதால் ஜாமீனில் வெளியே வரக்கூடிய, பிடிவாரன்ட் இருவர் மீதும் பிறப்பிக்கப்பட்டது.

    இத்தகவல் லதா, சவுந்தர்யாவுக்கு தெரியவந்ததும், கடன் பணத்திற்கான டிடியை வழங்கினர். இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக சுமர்சந்த் பாப்னா சார்பில், நேற்று மதியம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை ஏற்றுக் கொண்டு, வழக்கை டிஸ்மிஸ் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

    English summary
    Chennai court issued an arrest warrant against Superstar Rajinikanth's wife Latha Rajinikanth and daughter Soundarya in a cheque bounce case. Later Latha and Soundarya through their lawyer made an out of court settlement with Baffna. The petitioner immediately agreed to withdraw his complaint and pleaded that his plea be dismissed.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X