டோணிக்கு முன்னாடி 'கீரிப்புள்ளை'யாக மாறிய பிரபலங்கள்...!

By Mayura Akilan

ஹேர் ஸ்டைல் ஒருவரின் அழகை அதிகரித்துக்காட்டும். அழகாக இருப்பவரின் அழகை அதிகரிப்பதுதான் தலை அலங்காரத்தின் முக்கிய அம்சம்.

ஆனால் முடியை வெட்டுகிறேன் பேர்வழி என்று உள்ளதையும் கெடுத்துக் கொள்வார்கள் சில பிரபலங்கள். கிரிக்கெட் வீரர்கள், மாடல்கள், நடிகர், நடிகையர்கள் என யாருமே இந்த விசயத்தில் தப்ப முடியாது.

சமீபத்திய டாக் டோணியின் கீரிப்புள்ள ஹேர் ஸ்டைல்தான். இதேபோல கண்ட மேனிக்கு முடியை கொதறி அசிங்கப்படுத்திக்கொண்ட சில பிரபலங்களும் இருக்கத்தான் செய்கின்றனர் அவர்களைப் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்களேன்.

டோனியின் கீரிப்புள்ள

டோனியின் கீரிப்புள்ள

அழகாய் ஸ்டைலாய் இருந்த டோணி தலையை குதறிக் கொண்ட கீரிப்புள்ள லுக்

ஷாருக்கான்

ஷாருக்கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் எப்பவுமே செம ஸ்டைலான ஹேர் கட்தான். ஆனால் ஒருமுறை காக்கா கூடு போல வெட்டிக்கொண்டு வந்து ரசிகர்களிடம் வாங்கிக் கட்டினார். பிறகு குட்டியா போனி டெய்ல் போட்டு நல்லவே இல்லையே என்று பெயர் வாங்கினார்.

சல்மான் கான்

சல்மான் கான்

பாலிவுட் உலகில் மிகமோசமான ஹேர் ஸ்டைல் வைத்திருந்தவர் என்று ஒருமுறை பெயரெடுத்தார் சல்மான் கான். சட்டியை தலையில் கவிழ்த்து போட்டது போன்ற ஹேர் ஸ்டைல் அது. அதேபோல சில காலம் போனி டெய்ல் போட்டும் நடமாடினார் சல்மான் கான்.

ஜான் ஆப்ரஹாம்

ஜான் ஆப்ரஹாம்

பாலிவுட் உலகில் நுழைவதற்கு முன்பு மாடலாக இருந்தவர் ஜான் ஆப்ரஹாம். நீள முடியை தோள்ப்பட்டை வரைக்கும் வளர்த்து பார்க்கவே சகிக்காத தோற்றத்தில் இருந்தவர்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பாலிவுட் உலகில் நடித்த பிரியங்கா சோப்ரா சில ஆண்டுகளுக்கு முன்பு பிசி கட் ஹேர் ஸ்டைல் செய்திருந்தார். கொஞ்சம் அவருக்கு பொருத்தமே இல்லாத ஹேர் ஸ்டைல் அது.

தனுஸ்ரீ தத்தா

தனுஸ்ரீ தத்தா

தனுஸ்ரீ தத்தாவின் முகத்திற்கு கொஞ்சமும் பொருத்தமே இல்லாத பிக்ஸி ஹேர் ஸ்டைல் பார்த்து ரசிகர்கள் கொதித்து போனார்கள்.

ப்ரீத்தி ஜிந்தா

ப்ரீத்தி ஜிந்தா

பாலிவுட் நடிகையான ப்ரீத்தி ஜிந்தா அவ்வப்போது தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொள்வார். குட்டை, கர்லி, ஸ்ட்ரைட் என மாற்றினாலும் கொஞ்சம் கூட அவருக்கு பொருத்தமில்லாத ஹேர்ஸ்டைல்தான் என்கின்றனர் ரசிகர்கள்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

அழகுப் பெண் தீபிகாவிற்கு சாந்தினி சவுக் டூ சைனா படத்தில் வைத்த ஹேர் ஸ்டைல் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து விட்டதாக ரசிகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X