10 ஆண்டுகளை கடந்த 180 படம் அந்த படத்துல நடிச்சது பெரிய பாக்கியம்... பிரியா ஆனந்த் மகிழ்ச்சிப்பதிவு
சென்னை : கடந்த 2011ல் இதே நாளில் வெளிவந்த படம் 180. இதில் சித்தார்த், பிரியா ஆனந்த் மற்றும் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஜெயேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் இவர்கள் மூவருக்குமே அவர்களது கேரியரில் பெஸ்ட் படமாக அமைந்தது.
இந்நிலையில் இந்த படம் வெளிவந்து இன்றுடன் 10 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளதையடுத்து பிரியா ஆனந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சிறப்பான படம்
சித்தார்த், பிரியா ஆனந்த் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்த படம் 180. ஜெயேந்திரா இயக்கத்தில் வெளியான இந்த படத்தை கிரண் ரெட்டி, ஸ்வரூப் ரெட்டி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் தயாரித்திருந்தனர். படத்திற்கு ஷரத் இசையமைத்திருந்தார்.

ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்
மௌலியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படம் சித்தார்த், பிரியா ஆனந்த் மற்றும் நித்யா மேனன் ஆகியோருக்கு அவர்களின் கேரியரில் சிறப்பாக அமைந்தது. பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவர்ந்தது. முக்கியமாக படத்தில் சித்தார்த் பிரியா ஆனந்திற்கு பர்த்டே சர்ப்ரைஸ் கொடுக்கும் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பிரியா ஆனந்த் மகிழ்ச்சி
சித்தார்த் சென்னையில் தன்னுடைய மீதமுள்ள வாழ்க்கையை கழிக்கும் போர்ஷனும் இயல்பாக அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படம் வெளிவந்து 10 ஆண்டுகள் கடந்துள்ளதை பிரியா ஆனந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பிரியா ஆனந்த் நெகிழ்ச்சி
அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தன்னுடைய பாக்கியம் என்று தெரிவித்துள்ள அவர், தற்போதுவரை தன்னை பார்ப்பவர்கள் அந்த படம் குறித்து அதன் நினைவுகள் குறித்து தன்னிடம் பகிர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் டைரக்டருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











