twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் படப்பிடிப்பில் 3 பேர் பலியான சம்பவம்... கிரேன் விபத்துக்கு இதுதான் காரணமா? பரபரப்பு தகவல்கள்

    By
    |

    Recommended Video

    Indian 2 Shooting Spot Incident detailed | EVP Film City | Director Shankar | Kamal Hassan

    சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்துக்கு இதுதான் காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கமல் நடிக்கும் 'இந்தியன்' படத்தின் படப்பிடிப்பில் நேற்றுமுன் தினம் இரவு விபத்து ஏற்பட்டது.

    நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடத்தப்பட்ட படப்பிடிப்பில் ராட்ச கிரேன் கீழே விழுந்தது.

    நூலிழையில்

    நூலிழையில்

    இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மதுசூதனன் ஆகியோர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்தபோது அங்கு இருந்த நடிகர், கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பினர். இதுபற்றி நடிகர் கமல்ஹாசன் கூறும்போது, இந்த விபத்தில் நூலிழையில் உயிர் தப்பினேன்.

    காஜல் அகர்வால்

    காஜல் அகர்வால்

    இரண்டு அடி முன்னால் சென்றிருந்தால் நானும் இறந்திருக்கக் கூடும். என்னைப் போல படத்தின் இயக்குனரும் கதாநாயகியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர் என்று கூறியிருந்தார். நடிகை காஜல் அகர்வாலும் கூறியிருந்தார். பயங்கரமான இந்த கிரேன் விபத்தால் அதிர்ச்சியில் இருக்கிறேன். நான் உயிரோடு இருந்து இந்த பதிவை வெளியிட ஒரு நொடி மட்டுமே ஆனது. நேரம் மற்றும் உயிரின் மதிப்பு பற்றி கற்றுக்கொண்டேன் என்று கூறியிருந்தார்.

     தீவிர சிகிச்சை

    தீவிர சிகிச்சை

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் சீரியசான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து பற்றி நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்துக்கு காரணம் என்ன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    நூறு அடி கிரேன்

    நூறு அடி கிரேன்

    கமலின் 'இந்தியன் 2' படத்துக்கு நூறடி உயரமுள்ள கிரேனை பயன்படுத்தியுள்ளனர். நாங்கள் 40 அடி 60 அடி உயரமுள்ள கிரேனை பயன்படுத்த தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். ஆனால், இங்கு பயன்படுத்தப்பட்டது அதிகமான உயரமான கிரேன். தளம் பலவீனமாக இருந்தால் கிரேனை தாங்கும் சக்தி இல்லாமல் விபத்து ஏற்பட்டுள்ளது என்று போலீசார் கூறியுள்ளனர்.

    English summary
    According to the police, 100 ft industrial crane was deployed and the floor was weak. resulting in the accident.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X