பாவம் அதர்வா, இப்படி சோதனை மேல் சோதனையா?
சென்னை: அதர்வாவின் 100 படத்தை லீக் செய்துவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.
விஷாலின் அயோக்யா போன்றே அதர்வா, ஹன்சிகா நடித்த 100 படமும் சில பல பிரச்சனைகளுக்கு பிறகே ரிலீஸானது. ரிலீஸ் தள்ளிப் போய் தள்ளிப் போய் வெளியான 100 படத்தை பார்த்த ரசிகர்கள் அதர்வாவின் நடிப்பை பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் அந்த படத்தின் வசூல் பாதிக்கப்படும் வகையில் அதை ஆன்லைனில் கசியவிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். அந்த வீடியோ மற்றும் ஆடியோவின் தரம் மோசமாக இருந்தாலும் அதையும் பலர் டவுன்லோடு செய்து பார்த்துள்ளனர்.
தமிழ் ராக்கர்ஸ் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. அந்த தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை அடக்க முடியாத விஷால் தமிழக அரசு அந்த வேலையை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

கஷ்டப்பட்டு பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் தான் தமிழ் ராக்கர்ஸால் கதறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கதறல், கண்ணீர் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷாலுக்கு தெரியவே இல்லையா?
விஷாலால் தமிழ் ராக்கர்ஸை ஒன்னும் செய்ய முடியாது என்று முன்பே தயாரிப்பாளர்கள் தெரிவித்த நிலையில் அவர் அந்த பொறுப்பை நைசாக தமிழக அரசிடம் ஒப்படைத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











