கடைசி நேரத்தில்... திடீரென ரத்தானது '100' பட ரிலீஸ்... அப்செட்டில் படக்குழு!

100 திரைப்படம் இன்று ரிலீசாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: நடிகர் அதர்வாவின் 100 திரைப்படம் இன்று ரிலீசாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா போலீசாக நடித்துள்ள படம் 100. அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். ராதாரவி, மைம் கோபி உள்பட முக்கிய நடிகர்கள் பலர் நடித்துள்ள இப்படத்தை, ஆரா சினிமாஸ் தயாரித்துள்ளது.

100 movie release postponed again

இப்படம் கடந்த வாரம் 3ம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், சிலப்பல காரணங்களால் ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, இன்று இப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக விளம்பரங்கள்கூட கொடுக்கப்பட்டன.

ஆனால் திடீரென இப்பட ரிலீஸ் மீண்டும் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இப்படத்தின் இயக்குநர் சாம் ஆண்டன் தனது டிவிட்டர் பக்கத்தில், '100 படத்திற்கு நல்ல முறையில் விமர்சனங்கள் கொடுத்தமைக்கு நன்றி. நானும் எனது குழுவும் எங்கள் உயிரைக் கொடுத்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாதமைக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 100 படம் நாளை (இன்று) ரிலீஸ் ஆகாது. என்னுடைய வேலை முடிந்து விட்டது. கூர்க்கா பட வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

100 பட ரிலீஸ் திடீரென தள்ளிப் போனதால், இப்படத்திற்கு ஆன் லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு, அப்பணம் பத்து நாட்களில் திருப்பி தரப்படும் என குறுஞ்செய்தி மூலம் சம்பந்தப்பட்ட தியேட்டர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: atharva அதர்வா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X