Don't Miss!
- News
டெல்லி விமான நிலையத்தில் கேன்சர் பாதித்த பெண் பயணியை இறக்கிவிட்ட அமெரிக்க விமானம்.. காரணம் என்ன?
- Sports
இந்தியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த பாக். முடிவே எடுக்காமல் திரும்பி வந்த ஜெய்ஷா.. என்ன நடந்தது
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தனுஷ் பங்கேற்ற விழாவில் படம் துவங்கியதுமே வெளிநடப்பு செய்த 100 பேர்
Recommended Video

கேன்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு படத்தை திரையிட்டபோது 100 பேர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் நடந்து கொண்டிருக்கிறது. பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், ஹூமா குரேஷி, மல்லிகா ஷெராவத், நடிகர் தனுஷ் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவில் லார்ஸ் வோன் ட்ரையர் இயக்கிய சீரியல் கில்லர் படமான தி ஹவுஸ் தட் ஜாக் பில்ட் திரையிடப்பட்டது.

பிரபலங்கள்
திங்கட்கிழமை இரவு திரையிடப்பட்ட தி ஹவுஸ் தட் ஜாக் பில்ட் படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே 100 பிரபலங்கள் அரங்கில் இருந்து வெளியே சென்றுவிட்டனர்.

ஜாக்
தொடர் கொலை செய்யும் ஜாக் என்ற கதாபாத்திரத்தில் மேட் தில்லன் நடித்துள்ளார். அவர் 2 குழந்தைகளின் தலையில் சுட்டுக் கொன்ற காட்சியை பார்த்ததுமே 100 பிரபலங்கள் அரங்கில் இருந்து நடையை கட்டிவிட்டனர்.

கொடூரம்
சின்ன குழந்தைகள், பெண்களை ஈவு இரக்கமே இல்லாமல் கொன்று அவர்களின் உடல்களை சிதைப்பதை காட்டும் இது எல்லாம் ஒரு படமா. பார்த்தாலே கொடூரமாக உள்ளது என்று பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

இது அல்ல
குழந்தைகள், பெண்களை கொலை செய்வதற்கு பெயர் படமும் இல்லை கலையும் இல்லை. அந்த கொடூரத்தை பார்க்க முடியவில்லை. குமட்டிக் கொண்டு வந்தது என்று வெளிநடப்பு செய்தவர்கள் கூறியுள்ளனர்.

பாராட்டு
கடைசி காட்சி வரை இருந்து பார்த்துவிட்டு வந்தவர்களோ படம் அருமையாக உள்ளது. திறமையாக காட்சிப்படுத்தியுள்ளனர் என்று பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.