twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா..? 'காதல் மன்னன்' ஜெமினி கணேசனுக்கு இன்று நூறு வயது!

    By
    |

    சென்னை: தமிழ் சினிமாவின் மறக்க முடியாத காதல் மன்னனுக்கு இன்று நூறுவயது!

    காதல் மன்னன் என்று சொன்னால் நினைவுக்கு வருவது இவர்தான். ஆனால், அவர் காதல் தாண்டியும் நடிப்பில் கலக்கியவர்.

    சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் தான் காதல் மனம் கொண்டவர் என்பதை, ஒளிவு மறைவின்றி ஒப்புக்கொண்ட பெரும் மனசுக்காரர்.

    அந்த காலத்திலேயே

    அந்த காலத்திலேயே

    அந்த காதல் மன்னனை ஜெமினிகணேசன் என்கிறார்கள். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி கொடிகட்டி பறந்த காலத்தில், ஆர்.கணேஷ் என்ற பெயரில் அறிமுகமானவர், ஜெமினி. அந்த காலத்திலேயே பிஎஸ்சி பட்டம் பெற்ற இந்த புதுக்கோட்டைக்காரர், சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆசிரியராகத்தான் முதலில் பணியாற்றினார்.

    காஸ்டிங் டைரக்டர்

    காஸ்டிங் டைரக்டர்

    பிறகு ஜெமினி நிறுவனத்தில் புதுமுகங்களைத் தேர்வு செய்யும் காஸ்டிங் டைரக்டர் ஆனார். இங்கிருந்து தொடங்கியது அவருடைய சினிமா பயணம். 1947 ஆம் ஆண்டில் வெளியான மிஸ்.மாலினி படத்தில் சின்ன வேடத்தில் நடித்தவர், பெண் படம் மூலம் ஹீரோ ஆனார். அந்த படத்தில் அஞ்சலி தேவி ஹீரோயின்.

    எளிதாக பொருந்தி

    எளிதாக பொருந்தி

    அப்போது சிவாஜியும், கணேசன் என்றே அழைக்கப்பட்டதால், தன் பெயருக்கு முன், தான் பணியாற்றிய ஜெமினி நிறுவன பெயரை இணைத்து 'ஜெமினி கணேசன்' ஆனார், இந்த கணேஷ்! எந்த கேரக்டருக்கும் எளிதாகப் பொருந்தி விடுகிற ஜெமினியை, இயல்பான நடிகர் என்கிறார்கள்.

    மாற்றி விட்டது

    மாற்றி விட்டது

    அவர் சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். அதிலும் தன்னை நிரூபித்தவர். தாயுள்ளம் படத்தில், ஆர்.எஸ்.மனோகர் ஹீரோ. ஜெமினி வில்லன். காலம் இருவரையும் தலைகீழாக மாற்றிப்போட்டுவிட்டது. பிறகு வில்லனாகவே தொடர்ந்தார், மிரட்டல் குரலோன் ஆர்.எஸ்.மனோகர்!

    இயக்கி இருக்கிறார்

    இயக்கி இருக்கிறார்

    இலக்கியம், சினிமா, இசை, விளையாட்டு ஆகியவற்றின் மீது அதிக ஈடுபாடு கொண்ட ஜெமினி, 'இதய மலர்' என்ற ஒரே ஒரு படத்தை இயக்கி இருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

    நூறு வயது

    நூறு வயது

    அவருக்கு இன்று நூறு வயது. 'அவர் எப்போதும் காமெடியாகபேசிக்கொண்டிருப்பவர். எந்த ஈகோவும் பார்க்கமாட்டார். அதிக அன்பும் கருணையும் கொண்டவர் என்கிறார் அவருடன் அவ்வை சண்முகியில் நடித்த டெல்லி கணேஷ். அவர் ரசிகர்கள் மனதில் காதல் மன்னனாக என்றும் வாழ்வார். இதையடுத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் அவர் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

    English summary
    100 Years Of Gemini Ganesan: He was known as the Kadhal Mannan of Tamil cinema, but Gemini Ganesan brought much more to the table than just romance.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X