Allu Arjun: ரூ.1000 கோடி வசூல்.. ரூ.300 கோடி சம்பளம்.. கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் சொத்து மதிப்பு
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோ பார்க்க வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்ட 35 வயதுடைய ரேவதி என்ற ரசிகை உயிரிழந்தார். இதனால் அல்லு அர்ஜுன் மீதும், ஹைதராபாத் சந்தியா தியேட்டர் ஓனர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையினரைக் கடந்து அரசியல்வாதிகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அல்லு அர்ஜுன் குறித்து பல தகவல்களை ரசிகர்கள் தேடி வருகின்றனர். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
நடிகர் அல்லு அர்ஜுன் மீது பதியப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்காது என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றார்கள். மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிட்டத்தட்ட 5 முதல் 10 ஆண்டுகளுக்கு சிறைதண்டனை கிடைக்கும் எனவும் கூறுகின்றனர். இவரது நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன புஷ்பா 2 படம் ஒரு வாரத்தில் அதாவது 7 நாளில் 1067 கோடிகளை வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல், படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு ரூபாய் 300 கோடிகள் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இப்படியான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அல்லு அர்ஜுனின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 500 கோடிகள் எனக் கூறப்படுகின்றது. இதுமட்டும் இல்லாமல், அவர் தனது பணத்தினை பல தளங்களில் முதலீடும் செய்துள்ளார். அதேநேரத்தில் இடமாகவும், வீடாகவும், பெரிய பெரிய பங்களாவாகவும் வாங்கியுள்ளார்.
சொத்து மதிப்பு: அல்லு அர்ஜுன் திரைப்படத்தில் நடிப்பது மட்டும் இல்லாமல், விளம்பரங்களில் நடிப்பது, தனது சமூக வலைதளப்பக்கங்களில் சில பிராண்ட்களை ப்ரோமோட் செய்வது என இவருக்கு வருமானம் வந்தவண்ணம் உள்ளது. இதில் இவர், ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸில் ரூபாய் 100 கோடிகள் மதிப்பில், பெரிய பங்களாவை வாங்கியுள்ளார். அதேபோல், விலையுயர்ந்த நகரமான மும்பையில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட, பிளாட் வாங்கியுள்ளார்.
வருமானம்: இதுமட்டும் இல்லாமல், அமெரிக்க பார், ஹோட்டலுக்கும் உரிமம் வைத்துள்ளார். அதேபோல், 10 ஏக்கரில் அல்லு ஸ்டூடியோஸ் என்ற ஸ்டூடியோஸையும் திறந்துள்ளார். கீதா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் அல்லு அர்ஜுன் குடும்பம் நடத்தி வருகின்றது. இவரது ஆண்டு வருமானம் ரூபாய் 90 கோடிகள் வரை உயர்ந்துள்ளது. இதில் சினிமாவில் நடித்து சம்பாதிப்பது, விளம்பரங்களில் நடிப்பது என அனைத்தும் அடங்கும். இதில் இவர் விளம்பரங்களில் நடிக்க ரூபாய் 7 கோடிகள் முதல் 9 கோடிகள் வரை சம்பளமாகப் பெருவதாக கூறப்படுகின்றது.
கார்கள்: இது மட்டும் இல்லாமல், அல்லு அர்ஜுன் தனது வீட்டில் பல சொகுசுக் கார்களை வாங்கி நிறுத்தியுள்ளார். அவர் வைத்துள்ள சொகுசுக் கார்களில், BMW X6m, Hummer H2, Mercedes GLE 350d, Volvo XC90 T8 Excellence ,Jaguar XJ L மற்றும் Range Rover, வேனிட்டி வேன், பால்கன் வேனிட்டி வேன் உள்ளிட்ட சொகுசு கார்களும் வேன்களும் உள்ளது. இவர் கைது செய்யப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











