அடேங்கப்பா 1000 கோடி ரூபாய்..10 மாதத்தில் படம் பார்க்க செலவழித்த தமிழக மக்கள்

தமிழகத்தில் கொரோனா பாதித்த இருண்ட காலமான 2020-21 காலகட்டத்தில் திரையுலகமே முடங்கிப் போனது.

இந்தியா முழுவதும் லாக் டவுன் போடப்பட்டதால் எந்தவித செயல்பாடும் நடக்காததால் பொதுமக்களுடைய இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

ஆனால் லாக்டவுன் நீங்கி திரைப்படங்கள் வெளியான இந்த 2022 ஆம் ஆண்டு 10 மாதத்தில் மட்டும் படம் பார்க்க 1000 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் செலவழித்துள்ளனர்.

 கொடிய கொரோனாவால் வாழ்வாதாரம் பாதித்த தமிழக மக்கள்

கொடிய கொரோனாவால் வாழ்வாதாரம் பாதித்த தமிழக மக்கள்

கொரோனாவின் பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதற்கு பல பத்தாண்டுகள் ஆகும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். இந்தியாவில் மட்டும் கொரோனா பாதிப்பால் 5.5. கோடி பேர் வேலையிழந்ததாக ஐ.எம்.எஃப் சமீபத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா லாக்டவுனால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அவரவர் செலவுகளை சுருக்கி கொள்ளும் நிலை ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டு லாக்டவுன் நீக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியது. இந்தக் காலக்கட்டம் திரையுலகிற்கு பொற்காலம் என்று சொல்லலாம். கடந்த 10 மாதத்தில் பல படங்கள் வெளிவந்து அதில் சில படங்கள் 300 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் அளவுக்கு மாபெரும் வெற்றி பெற்றதை பார்த்தோம்.

 சினிமா பார்க்க ரூ.1000 கோடியை செலவழித்த தமிழக மக்கள் மலைப்பாக இருக்கா?

சினிமா பார்க்க ரூ.1000 கோடியை செலவழித்த தமிழக மக்கள் மலைப்பாக இருக்கா?

கொரோனா பாதித்த காலகட்டத்தில் கடுமையான இடர்பாடுகளை சந்தித்த தமிழக மக்கள் இந்த 2022 ஆம் ஆண்டு 10 மாதத்தில் மட்டும் சினிமா பார்ப்பதற்காக ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்துள்ளார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் பார்க்க டிக்கெட்டுக்காக 1000 கோடி ரூபாயை செலவழித்துள்ளது என்பது சற்று அதிர்ச்சியாக தான் இருக்கிறது. கொரோனா பாதிப்பின் வீழ்ச்சி உலகம் முழுவதும் இருந்தது, தமிழகத்திலும் அதன் எதிரொலி இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் எந்தவித செயல்பாடும் இன்றி மக்கள் முடங்கினர். பலருக்கு வேலை போனது. பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டது. பலர் வீடு இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. செலவுகள், சேமிப்புகள் அனைத்தும் கரைந்து வாடுகின்ற நிலை ஏற்பட்டது.

 கடும் நஷ்டத்தில் சிக்கிய திரைத்துறை

கடும் நஷ்டத்தில் சிக்கிய திரைத்துறை

கொரோனா காலம் முடிந்தபின் அதிலிருந்து மீள்வதற்கே பல மாதங்கள் ஆனது. சொந்த பந்தங்களை இழந்த குடும்பங்கள், சம்பாதித்து கொடுப்பவரை இழந்த குடும்பங்கள் என பல சோகக் கதைகள் உண்டு. கொரோனா காலகட்டத்தில் தமிழக திரையுலகும் முடங்கிப் போனது. அனைத்து சூட்டிங் திரை உலக செயல்பாடுகள் திரையரங்குகள் மூடப்பட்டதால் திரைத்துறையினர் கடுமையான இக்கட்டுக்கு ஆளானார்கள். பெரிய அளவில் நஷ்டமடைந்தனர். திரைத்துறை சார்ந்த தொழிலாளிகள் வருமானமின்றி வாடினர். அவர்களுக்கு நடிகர் சங்கம், பெப்சி, பெரிய நடிகர்கள் தனிப்பட்ட முறையில் உதவினர். அவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை வழங்கினர். யானை பசிக்கு சோளப் பொரியாக இருந்தாலும் அதுவாவது கிடைத்தது என்று அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டதை காண முடிந்தது.

 சகஜ நிலைக்கு திரும்பிய 2022..திரைத்துறையினருக்கு பொற்காலம்

சகஜ நிலைக்கு திரும்பிய 2022..திரைத்துறையினருக்கு பொற்காலம்

கொரோனா காலம் நோய் தாக்கம் முடிவடைந்த பின் ஊரடங்கு நீக்கப்பட்ட பின் 2022 ஆம் ஆண்டு நல்ல முறையில் பிறந்தது. சகஜமான நிலைக்கு மக்கள் திரும்பினர். திரைப்படத்துறையினரும் தங்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டு பல படங்களை திரைக்கு கொண்டு வந்தனர். தியேட்டர்கள் திறக்கப்பட்டது, புதிய படங்கள் வெளிவந்தது. இதனால் திரைத்துறையினர் பெரிய அளவில் படங்களை எடுத்து வெளியிட்டனர். பழைய சகஜ நிலை திரும்பியதால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக செலவுக்கு வழியில்லாமல் வருமானம் இன்றி தவித்த பொதுமக்கள் இந்த ஆண்டில் கடந்த 10 மாதத்தில் மட்டும் திரைப்படங்கள் பார்ப்பதற்காக 1000 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளார்கள் என்பதே.

 300 கோடி கிளப்பில் இணைந்த முன்னணி நடிகர்களின் 4 படங்கள்

300 கோடி கிளப்பில் இணைந்த முன்னணி நடிகர்களின் 4 படங்கள்

இதை வேறு விதமாக சொல்வது என்றால் திரைத்துறையில் இந்த ஆண்டு பொற்காலமான காலம் எனலாம். இந்த ஆண்டு வெளிவந்த பல படங்கள் 100 கோடி கிளப் 200 கோடி கிளப் 300 கோடி கிளப் என்று பெரியளவில் லாபம் பார்த்துள்ளன. சில குறிப்பிட்ட படங்கள் இந்த ஆயிரம் கோடியில் பெரிய அளவில் சதவீதத்தை பெற்றுள்ளன. இது தவிர பல படங்கள் ஓடியதையும் சேர்த்து பார்த்தால் 1000 கோடி ரூபாய் அளவிற்கு திரைத்துறையில் வியாபாரம் நடந்துள்ளது. இவைகள் ரூ.75 கோடி அளவில் வசூல் பார்த்த படங்களை மக்கள் டிக்கெட் வாங்கி பார்த்த வரவுகளைப் பற்றிய குறிப்பு. இது அல்லாமல் சிறிய பட்ஜெட் படங்கள் 75 கோடி ரூபாய்க்கு கீழே வசூலித்த படங்களின் தொகுப்பு. இதில் தமிழ் டப் செய்யப்பட்ட ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப்-2, புஷ்பா போன்ற படங்களும் அடக்கம்.

 பெரும் வசூல் பெற்ற படங்கள், சிறு வசூல் படங்கள்

பெரும் வசூல் பெற்ற படங்கள், சிறு வசூல் படங்கள்

மிகப்பெரிய அளவில் பெரும் வசூலை பார்த்த படங்களில் தமிழில் வெளியான வலிமை, பீஸ்ட், விக்ரம், திருச்சிற்றம்பலம், டான் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் போன்ற படங்களும் அடக்கம். சிறிய அளவு பட்ஜெட்டில் வெளியாகி சிறிய அளவில் 20 கோடி, 30 கோடி, 50 கோடி ரூபாய் அளவு வசூல் பார்த்த படங்களும் உண்டு. அந்த வகையில் விருமன், நானே வருவேன், வெந்து தணிந்தது காடு டாணாகாரன் என பல படங்களை சொல்லலாம். அப்படி பார்த்தால் கிட்டதட்ட 1200 கோடி ரூபாய் அளவிற்கு கடந்த 10 மாதங்களில் மட்டும் மக்கள் டிக்கெட்டுகளை வாங்கி படம் பார்த்துள்ளனர் எனலாம்.

 ரூ.1500 கோடி அளவிற்கு திரையுலகிற்கு கொட்டி கொடுத்துள்ள தமிழக மக்கள்

ரூ.1500 கோடி அளவிற்கு திரையுலகிற்கு கொட்டி கொடுத்துள்ள தமிழக மக்கள்

இதில் கூடுதலாக டிக்கெட்டுகளுக்கு வசூலிக்கப்பட்ட டிக்கெட்டுகளை சேர்க்க முடியாது. அதையும் சேர்த்தால் மக்கள் செலவழிபடுத்துள்ள தொகை ரூ.1500 கோடி ரூபாயை தாண்டும். இதை ஒருபுறம் பார்த்தால் திரைத்துறையினருக்கு ஒரு வளமான பொற்காலம், ஒரு நல்ல காலம் என்று சொல்லலாம். ஆனால் மறுபுறம் கடுமையான இரண்டு ஆண்டு கால கொரோனா லாக்டவுன் கஷ்டங்களைக் கடந்த மக்கள் இவ்வளவு அதிக தொகையை 10 மாதத்தில் செலவழித்து உள்ளார்களே என்பதை பார்க்கும் பொழுது மலைப்பாக உள்ளது. வேறு என்ன என்டர்டெயின்மென்ட் உள்ளது பொழுதுபோக்கு என்றால் இது தானே என்று சிலர் கேட்பதும் புரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X