twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டி.ராஜேந்தருக்கே பத்தாயிரம் அபராதம்... டெங்கு ஒழிப்பில் பரிதாபம்!

    By Vignesh Selvaraj
    |

    வேலூர் : தமிழகம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பதில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் சுகாதாரமற்று இருக்கும் நிறுவனங்கள், வீடுகள் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    நடிகர் டி.ராஜேந்தர் சமீபத்தில் நடிகை தன்சிகாவை பொது மேடையில் திட்டி அழவைத்தது சர்ச்சையானது. பல விஷயங்களுக்காக குரல் கொடுக்கும் இவர் சில படங்களில் பாடி வருகிறார். டி.ஆருக்கு சொந்தமான தியேட்டர்கள் வேலூர் மாவட்டம் கொணவட்டத்தில் உள்ளது.

    10000 fine for t.rajendhar

    டெங்கு நோய் தடுப்பிற்காக பல இடங்களிலும் அரசு அதிகாரிகள் சோதனை நடத்தி கொசுவை உற்பத்தி செய்யும் வகையில் நடந்துகொள்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் சுகாதார அதிகாரிகள் நேற்று வேலூரில் ஆய்வு நடத்தி வந்தபோது நடிகரும் டைரக்டருமான டி.ராஜேந்தருக்கு சொந்தமான 2 தியேட்டர்களிலும் ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த தியேட்டரில் டெங்கு கொசுவை உற்பத்தி செய்யும் வகையில் ஒரு தண்ணீர் தொட்டி இருந்ததை பார்த்த அதிகாரிகள் தியேட்டர் உரிமையாளரான டி.ராஜேந்தருக்கு ரூ.10,000 அபாரதம் விதித்தனர். அதுமட்டுமின்றி உடனடியாக அந்தத் தொட்டியை இடிக்கவும் உத்தரவிட்டனர். இதேபோல் வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    English summary
    In many cases, government officials have been fined for dengue prevention failures and for those who act on mosquito production. In this regard, government officials conducted have looked at T.Rajendhar's theater and have been imposed penalty Rs. 10,000.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X