twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எங்கள மாதிரி அவங்க என்ன 1000 ஆடிஷனா போறாங்க.. நெப்போடிசத்துக்கு எதிராக குரல் எழுப்பிய பிரபல நடிகை!

    |

    மும்பை: இயக்குநர் பால்கியின் அறிக்கை மீண்டும் பாலிவுட்டில் நெப்போடிச சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

    Recommended Video

    Malavika Mohanan Stunning Photoshoot | Master Audio Launch

    நெப்போடிசம் பற்றியெல்லாம் பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள், ஆலியா பட் மற்றும் ரன்பிர் கபூர் போன்ற நடிகர்களை காட்டி விட்டு பிறகு பேசுங்கள் என பால்கி தெரிவித்ததற்கு பாலிவுட் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    நடிகை ஷ்ரத்தா தாஸ், எங்களை போன்று அவர்கள் என்ன 1000 ஆடிஷன்களையா பார்த்து விட்டு சினிமாவில் நுழைகின்றனர் எனக் கேட்டுள்ளார்.

    பிரபல நடிகையின் த்ரோபேக் பிகினி.. வெண்நுரை நடுவே கருப்பு தேவதை.. என்ன இப்படி வர்ணிக்கிறாய்ங்க!பிரபல நடிகையின் த்ரோபேக் பிகினி.. வெண்நுரை நடுவே கருப்பு தேவதை.. என்ன இப்படி வர்ணிக்கிறாய்ங்க!

    சுஷாந்த் சிங் தற்கொலை

    சுஷாந்த் சிங் தற்கொலை

    இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். அவரது மரணத்திற்கு பாலிவுட்டில் நிலவும் நெப்போடிசம் தான் காரணம் என்ற சர்ச்சை கிளம்பியது. மேலும், சுஷாந்த் சிங் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாகவும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    பாலிவுட் அரசியல்

    பாலிவுட் அரசியல்

    பாலிவுட் சினிமா உலகில் நிகழும் நெப்போடிசம் அரசியல் மிகவும் மோசமானது என ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் தங்களது கண்டனங்களையும், தங்களுக்கு ஏற்பட்ட புறக்கணிப்புகள் பற்றியும் மனம் திறந்து பேசி வருகின்றனர். சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட பிரபலங்கள், நெப்போடிசத்தை பேணிக் காக்கின்றனர் என்றும், ஆலியா பட், ரன்பீர் கபூர், சாரா அலி கான், அர்ஜுன் கபூர், சோனம் கபூர் உள்ளிட்ட பலர் நெப்போடிசத்தால் தான் வாய்ப்பு பெற்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

    இருந்தா காட்டுங்க

    இருந்தா காட்டுங்க

    இந்நிலையில் பா, ஷமிதாப், கி அண்ட் கா, பேட் மேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ள பாலிவுட் இயக்குநர் சமீபத்தில், நெப்போடிசம் என்றெல்லாம் பேசாதீங்க, ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரை விட சிறந்த நடிகர்கள் இருந்தால் காண்பித்து விட்டு, பின்னர் அது குறித்து பேசுங்க என்ற பேசி, மீண்டுமொரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

    பதிலடி

    பதிலடி

    மிஸ்டர் இந்தியா, பண்டிட் குயின், பானி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் சேகர் கபூர், பால்கி மீது மரியாதை இருக்கிறது. ஆனால், அவரது இந்த கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், வாரிசு நடிகர்களை விட தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் தான் சிறந்த நடிகர்களாக எப்போதுமே இருக்கின்றனர் என பல பிரபல நடிகர்களின் பட்டியலையும் வெளியிட்டு அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    1000 ஆடிஷன்ஸ்

    1000 ஆடிஷன்ஸ்

    ஒரே ஒரு சின்ன ரோலுக்காக எங்களை போன்ற பேக்ரவுண்டே இல்லாத நடிகர்கள் 1000 ஆடிஷன்களில் பங்கேற்கிறோம். ஆனால், பிரபலங்களின் வாரிசுகள், எந்தவொரு கஷ்டமும் படாமல், நேரடியாக ஹீரோவாகவும், ஹீரோயினாகவும் மாறுவது மட்டுமின்றி, திறமையான நடிகர்களின் வாய்ப்பையும் பறிப்பது சரியான ஒன்றா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் குண்டூர் டாக்கீஸ் நடிகை ஷ்ரத்தா தாஸ்.

    English summary
    Bollywood actress Shraddha das slammed nepotism by her tweet, “Without a backgd,u have to give 1000s of auditions for gettin 1 miniscule role in a movie.”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X