ட்விட்டரை தெறிக்க விட்ட தல ரசிகர்கள்: காரணம்...
சென்னை: தல ரசிகர்கள் ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் டிரெண்டாக விட்டுள்ளனர்.
தல, தளபதி ரசிகர்கள் ஹேஷ்டேக் ஸ்பெஷலிஸ்டுகள் என்றே கூற வேண்டும். திடீர் திடீர் என்று ஹேஷ்டேக் உருவாக்கி உலக அளவில், தேசிய அளவில் டிரெண்டாக விடுவார்கள்.
தற்போது தல ரசிகர்கள் அதை தான் செய்துள்ளனர்.

பிறந்தநாள்
அஜீத்தின் பிறந்தநாள் மே மாதம் 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் 100DAYS TO KING AJITH BDAY என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் உலக அளவில் டிரெண்டாக விட்டுள்ளனர் ரசிகர்கள்.
புகழ்
அஜீத் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தான் 100 நாட்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டனர்.
தெறி
அஜீத் பிறந்தநாள் அன்று தெறிக்க விட தற்போதே திட்டம் போடத் துவங்கிவிட்டார்கள் தல ரசிகர்கள். முதலில் ட்விட்டரை தெறிக்கவிட்டுள்ளனர்.
இவ்வளவு பாசமா?
தல மீது இம்புட்டு பாசமா வைத்திருக்கிறீர்கள். முடியல சாமி என்று நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர். ஆனால் தல ரசிகர்களோ தற்போதே கொண்டாட்ட மூடில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











