#100daysofatbbvedalam.. ட்விட்டரில் தெறிக்க விட்ட தல ரசிகர்கள்

By Manjula

சென்னை: அஜீத் நடிப்பில் கடந்த வருடம் வெளியான வேதாளம் திரைப்படம் நேற்று 100 வது நாளில் அடியெடுத்து வைத்தது.

அஜீத், சுருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி மற்றும் பலர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான படம் வேதாளம். சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று வேதாளம் 100 வது நாளில் அடியெடுத்து வைத்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த அஜீத் ரசிகர்கள் #100daysofatbbvedalam என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்டடிக்க வைத்தனர்.

நேற்று இந்தியளவில் தொடங்கி உலகளவில் இந்த ஹெஷ்டேக் ட்ரெண்டடித்தது குறிப்பிடத்தக்கது. அனிருத் தொடங்கி ரசிகர்கள் பலரும் கொண்டாடியவேதாளம் 100 நாள் கொண்டாட்டத்தில் ஒருசில பதிவுகள்.

ஓடி ஒளியற

"அவன் ஓடி ஒளியிற ஆளு இல்ல .. தேடி அடிக்கிற ஆளு" என்று வில்லன் பேசும் வசனத்தை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் பில்லா தனுஷ்.

பாத்தா பறக்க விடுவோம்

"பாத்தா பறக்க விடுவோம், பேசினா தெறிக்க விடுவோம்" என்று கொண்டாடி இருக்கின்றனர் மதுரை ரசிகர்கள்.

யாரும் இந்த காட்சியை

"தெறிக்க விடலாமா..யாரும் இந்தக் காட்சியை வெறுக்கவில்லை" என்று ட்வீட் செய்து மகிழ்ந்திருக்கிறார் விக்டோரியன்.

அஜீத் ஒரு நல்ல

"அஜீத் ஒரு நல்ல டான்ஸர் இல்லை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் தியேட்டரில் அவர் ஆடும்போது மொத்த ரசிகர்களும் எழுந்து ஆடியதை மறுக்க முடியாது" என்று அர்ஜுன் தெரிவித்து இருக்கிறார்.

இதைப் போல மேலும் பலரும் ட்வீட்டி வருவதால் இன்னும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது #100daysofatbbvedalam.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X