அவர் ரொம்ப சைலன்ட்..நீங்கதான் சூப்பர்ஸ்டார் ஆக்கிட்டீங்க.. தெறிக்கவிடும் #100KRTsForThalapathySelfie

சென்னை: மாஸ்டர் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் எடுத்த செல்ஃபியை போட்டு #100KRTsForThalapathySelfie என்ற ஹாஷ்டேக்கை தளபதி ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

தளபதி விஜய்யின் பிறந்தநாள் அடுத்த மாதம் 22ம் தேதி வருகிறது. பிறந்தநாளை முன்னிட்டு அடிக்கடி புதிய புதிய ஹாஷ்டேக்குகளை பதிவிட்டு விஜய் ரசிகர்கள் வேற லெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது, நடிகர் விஜய் எடுத்த செல்ஃபிக்கு 100 ஆயிரம் ரீட்வீட்கள் வந்துள்ளதை கொண்டாடும் விதமாக இந்த ஹாஷ்டேக்கை புள்ளிங்கோ வெறித்தனமாக செலிபிரேட் பண்றாங்க.

கதறவிடும் ரசிகர்கள்

கதறவிடும் ரசிகர்கள்

டிவிட்டரில் ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்வதெல்லாம் கோலிவுட் ரசிகர்களுக்கு கை வந்த கலையாக மாறி விட்டது. பெரிய பெரிய பிரச்சனைகளுக்கெல்லாம் வராத கூட்டம், விஜய் ரசிகர்கள் டிரெண்டிங் செய்தால், இந்தியளவில், உலகளவில் என விரிந்து கொண்டே போகிறது. இந்நிலையில், #100KRTsForThalapathySelfie தற்போது டிரெண்டாகி வருகிறது.

சமூக வலைதள சக்கரவர்த்தி

சமூக வலைதள சக்கரவர்த்தி

சமூக வலைதளங்களில் பல சாதனைகளை தொடர்ந்து நடிகர் விஜய் செய்து வருகின்றார். கடந்த ஆண்டு வெறும் 4 ட்வீட்டுகள் மட்டுமே நடிகர் விஜய்யின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியான நிலையில், சிறந்த டிவிட்டர் பிரபலங்கள் பட்டியலில் விஜய் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் பதிவிடும் ஒவ்வொரு டிவீட்டுக்கும் மில்லியன் கணக்கில் லைக்குகளும், ரிடிவீட்டுகளும் குவிகின்றன.

சாதனை நாயகன்

சாதனை நாயகன்

தென்னிந்திய சினிமாவில் அதிக டிவிட்டர் சாதனைகளை நடிகர் விஜய் தான் படைத்து வருகிறார் என்றும், அவரது ரசிகர்கள் ஒவ்வொன்றையும் உலகளவில் வைரலாக்கி வருகின்றனர் என்றும் ரசிகர்கள் நடிகர் விஜய்யை புகழ்ந்தும் பாராட்டியும் ஏகப்பட்ட டிவிட்டுகளை அள்ளி வீசி இந்த ஹாஷ்டேக்கையும் ஒரு ரெக்கார்டு படைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

சோஷியல் மீடியா மாஸ்டர்

சோஷியல் மீடியா மாஸ்டர்

நடிகர் விஜய் தான் சோஷியல் மீடியாவுக்கே மாஸ்டர் என்றும் அவரது ரசிகர்கள் பல விதமான மீம்களையும், புகைப்படங்களையும், விஜய் படத்தின் மாஸ் காட்சிகளையும் பதிவிட்டு வருகின்றனர். அண்மையில் மணி ஹெய்ஸ்ட் இயக்குநர் புரொஃபஸர் கதாபாத்திரத்திற்கு விஜய் பொருத்தமாக இருப்பார் எனக் கூறியதையும் டிரெண்ட் செய்கின்றனர்.

நன்றி நெய்வேலி

நன்றி நெய்வேலி

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகளில் எல்லாம் சந்தித்து விட்டு, நெய்வேலியில் மாஸ்டர் ஷூட்டிங்கை காண திரண்டு நின்ற தனது ரசிகர்களை காண வேன் மீது ஏறி அவர்களுடன் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 10ம் தேதி வெளியிட்டு Thank You Neyveli என பதிவிட்டு இருந்தார். அந்த டிவீட் படைத்த சாதனையை தான் தற்போது ரசிகர்கள் கொண்டுகின்றனர்.

காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர். நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே டீசர் அல்லது டிரைலரை வெளியிட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X