twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சதம் அடித்த சத்யஜித் ரே.. சல்யூட் செய்யும் சினிமா ரசிகர்கள்.. டிரெண்டாகும் #SatyajitRay

    |

    சென்னை: இந்திய சினிமாவின் மேஸ்ட்ரோவாக போற்றப்படும் சத்யஜித் ரேவின் 100வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    36 படங்களை இயக்கி 32 தேசிய விருதுகளை வென்ற ஒரு மாபெரும் திரை மேதை சத்யஜித் ரே.

    1921ம் ஆண்டு மே 2ம் தேதி பிறந்த சத்யஜித் ரே, 1992ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி தனது 70வது வயதில் இயற்கை எய்தினார்.

    எல்லாம் பக்காவா இருக்கு.. தப்பித்த பண்ணை வீடு.. பிரபாஸுக்கு சாதகமாக வந்த ஹைகோர்ட் தீர்ப்பு!எல்லாம் பக்காவா இருக்கு.. தப்பித்த பண்ணை வீடு.. பிரபாஸுக்கு சாதகமாக வந்த ஹைகோர்ட் தீர்ப்பு!

    இந்தியளவில் டிரெண்டிங்

    இந்தியளவில் டிரெண்டிங்

    சத்யஜித் ரேவின் 100வது பிறந்தநாளை, சினிமா ரசிகர்கள் #SatyajitRay என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். சத்யஜித் ரே இயக்கிய படங்கள் குறித்தும், அவர் பெற்ற விருதுகள் மற்றும் கெளரவ பட்டங்கள் பற்றியும் சினிமா ரசிகர்கள் பல ட்வீட்களை பதிவிட்டு அவரது நினைவலைகளில் மூழ்கி வருகின்றனர்.

    திரையில் மேஜிக்

    திரையில் மேஜிக்

    1955ம் ஆண்டு சத்யஜித்ரே இயக்கிய பதேர் பாஞ்சாலி படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. கேன்ஸ் திரைப்பட விழா உள்ளிட்ட 11 சர்வதேச விருதுகளை அந்த படம் அள்ளிக் குவித்தது. வெறும் திரைப்படங்களை மட்டும் இயக்காமல், திரையில் சத்யஜித் ரே செய்த பல மேஜிக்குகளும், ஒவ்வொரு சினிமா கலைஞனும் கற்க வேண்டிய பாடமாகும்.

    ஆஸ்கர் விருது

    ஆஸ்கர் விருது

    தனது வாழ்நாளில் 36 படங்களை இயக்கிய சத்யஜித் ரே 32 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 8 முறை கெளரவ டாக்டர் பட்டமும், கோல்டன் லயன், கோல்டன் பியர் விருதுகளை தலா ஒரு முறையும், சில்வர் பியர் விருதை இரு முறையும் பெற்றுள்ளார். பத்ம விபூஷன், பாரத ரத்னா என இந்தியாவின் அனைத்து உயரிய விருதுகளையும் வென்றுள்ள சத்யஜித்ரேவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டது.

    இந்திய சினிமாவின் முகவரி

    இந்திய சினிமாவின் முகவரி

    50களில் தொடங்கிய சத்யஜித்ரேவின் திரைப்பயணம் 90கள் வரை பல்வேறு கோணங்களில் இந்திய சினிமாவின் முகவரியாக திகழ்ந்தது. சத்யஜித் ரே எனும் மகா கலைஞன் இன்று நம்முடன் இல்லையென்றால், அவர் உருவாக்கி விட்டுச் சென்ற கலை நுட்பம் சினிமாவின் ஒவ்வொரு பாகத்திலும் என்றுமே உயிர்ப்புடன் இருக்கும் என ரசிகர்கள் போற்றி வருகின்றனர்.

    சூரியனையோ சந்திரனையோ

    சூரியனையோ சந்திரனையோ

    உலக சினிமா இயக்குநர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இயக்குநர் அகிரா குரோசாவா, சத்யஜித் ரே பற்றி கூறும்போது, சத்யஜித் ரேவின் படங்களை ஒருவன் பார்க்கவில்லை என்றால், இந்த உலகத்தில் இருந்துக் கொண்டு, சூரியனையோ அல்லது சந்திரனையோ பார்க்காமல் விட்டவர்களாக கருதப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.

    தூர்தர்ஷனில்

    தூர்தர்ஷனில்

    2K தலைமுறையினருக்கு சத்யஜித் ரே படங்களை பார்க்கும் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்க வாய்ப்பில்லை. சத்யஜித் ரேவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு தூர்தர்ஷனில் இன்று இரவு 11 மணிக்கு 1981ம் ஆண்டு வெளியான சத்கதி படத்தை ஒளிபரப்பு செய்கின்றனர். அதன் அறிவிப்பையும் தூர்தர்ஷன் தற்போது வெளியிட்டு இருக்கிறது.

    English summary
    Indian Cinema Maestro Satyajit Ray’s 100th Birth anniversary held on today. Cinema fans createe #SatyajitRay and tweet about his memories and great cinema works done by him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X