10ம் வகுப்பு, +2 மாணவர்களை சந்திக்க ரெடியான தளபதி விஜய்.. இந்த வருஷம் வைர நெக்லஸ் யாருக்கு!

சென்னை: கடந்த ஆண்டு 600/600 மதிப்பெண்களை 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் நடத்திய கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் வைர நெக்லஸ் பரிசாக வழங்கப்பட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், இந்த ஆண்டும் மாணவர்களை விரைவில் சந்திக்கப் போவதாக விஜய் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி விருதுகள் விழாவை விஜய் நடத்தியிருந்தார். லியோ படத்தின் லியோ தாஸ் கெட்டப்பில் விஜய் நிகழ்ச்சியில் செம ஹேண்ட்ஸமாக கலந்து கொண்டு 10 மணி நேரத்துக்கும் மேல் கால் கடுக்க நின்று பரிசுகளை மாணவர்களுக்கு வழங்கிய காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

10th and 12th top scorers will receive awards from Thalapathy Vijay this year too

10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ரிசல்ட்ஸ் வந்துள்ள நிலையில், அடுத்த மாதம் அதே போன்ற நிகழ்ச்சியை நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக வெற்றிக் கழகம்: அரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அடுத்தகட்ட வாக்காளர்களான மாணவர்களை கவரும் விதமாக 234 தொகுதிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தேர்வு செய்து நடிகர் விஜய் பரிசு வழங்கினார். அனைத்து மாவட்ட மாணவர்களையும் பெற்றோர்களுடன் அழைத்து வந்து திருமண மண்டபங்களில் தங்கவைத்து விருது விழாவை சிறப்பாக நடத்திய நிலையில், இந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மீண்டும் மாணவர்களை சந்தித்து பரிசுகளை வழங்கும் முடிவுக்கு விஜய் வந்திருப்பதாக கூறுகின்றனர்.

10th and 12th top scorers will receive awards from Thalapathy Vijay this year too

கல்வி விருது விழா: கடந்த ஆண்டு ஜூன் 17ம் தேதி விஜய் கல்வி விருது விழா நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர் விஜய் அதுவரை அப்படியொரு பப்ளிக் நிகழ்ச்சியை நடத்தாத நிலையில், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களை மேடைக்கு அழைத்து சால்வை அணிவித்து பரிசு வழங்கி கவுரவப்படுத்தினார். கல்வியின் பெருமையையும் அசுரன் படத்தின் வசனத்தை சுட்டிக் காட்டி விஜய் பேசியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

10ம் வகுப்பு தேர்வு முடிகள்: கடந்த மே 6ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. மாநிலம் முழுவதும் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவிலான தேர்ச்சியை பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 91.55% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

10th and 12th top scorers will receive awards from Thalapathy Vijay this year too

விரைவில் சந்திப்போம்: கோட் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்து வருகிறார். சென்னையில் தான் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜூன் 22ம் தேதி விஜய்யின் 50வது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு இந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் கல்வி விருது விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விஜய் விரைவில் சந்திப்போம் என்றும் அறிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X