பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தும் முன்பே கணிப்பு.. சூர்யா மட்டுமில்ல இவரும் நாஸ்ட்ரடாமஸ் தானாம்!

சென்னை: கொரோனா வைரஸ், வெட்டுக்கிளி படையெடுப்பு ஏன் கில்லி படம் வரை பல விசயங்களை நடிகர் சூர்யா முன்பே கணித்து விட்டதாக மீம்கள் பறக்கும் நிலையில், தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தும் முன்பே கணிக்கப்பட்டு இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

Surya movie Vs real life | Suriya | Kaappaan | 7 Aum Arivu

அந்த பழைய பேஷன்ட் சூர்யாவை டிஸ்சார்ஜ் பண்ணிட்டு, இந்த புது பேஷன்ட் சிவகார்த்திகேயனை அட்மிட் பண்ணுங்க என்கிற மீமும் போடலாமே மீம் க்ரியேட்டர்களுக்கு சின்னதா ஒரு சஜஷன்.

தற்போது, சூர்யாவை போல சிவகார்த்திகேயனும் எதிர்காலத்தை கணித்தது எப்போது என்பதை கண்டுபிடித்து மீம் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

நன்றி சொல்ல வார்த்தை இல்லை

நன்றி சொல்ல வார்த்தை இல்லை

நன்றி சொல்ல உனக்கு.. வார்த்தை இல்லை எனக்கு.. என்பது தொடங்கி, அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர் வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தான செய்தியை கேட்டதும், குஷியில் பல மாணவர்களே மீம் க்ரியேட்டர்களாக மாறி சமூக வலைதளத்தை கலக்கோ கலக்குன்னு கலக்கி வராங்க!

கொரோனா பேட்ச்

கொரோனா பேட்ச்

சிம்புவின் வாலு படத்தில் பிரம்மானந்தம் கிட்ட இன்டர்வியூவில் சந்தானம் பேசும் காமெடி வசனத்தை வைத்து, 10ம் வகுப்பில் என்ன மார்க் என்று கேட்கும் எச்.ஆரிடம் கொரோனா பேட்ச் என்று சொல்லும் மீமெல்லாம் வேற லெவலில் இணையத்தில் அதகளம் செய்து வருகிறது.

இந்த ஹீரோவும்

இந்த ஹீரோவும்

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான், 7ம் அறிவு, மாற்றான், கஜினி உள்ளிட்ட படங்களில் வரும் காட்சிகள் மற்றும் பாடல் வரிகளை தற்போது நடக்கும் கொரோனா வைரஸ், வெட்டுக்கிளி படையெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் மீம் போட்டு வந்த நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தாகும் என்பதை முன்பே கணித்துள்ளார் என்ற மீம் ஒன்று வைரலாகி வருகிறது.

என்ன படம்

என்ன படம்

ஏ.ஆர். முருகதாஸ் திரைக்கதையில் திருக்குமரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிப்பில் அனிருத் இசையில் உருவான மான் கராத்தே படத்தில் இடம்பெற்றுள்ள, "ஓப்பன் தி டாஸ்மாக்" பாடலில் வரும் "பரீட்சைக்கு போகாமலே ஆகிடுவேன் பாஸ் மா" என்ற வரிகளை ஹைலைட் செய்து தற்போது சிவகார்த்திகேயன் படங்களும் எதிர்காலத்தை கணிப்பதாக லந்து செய்து வருகின்றனர்.

சத்யராஜ் தான் முதல

சத்யராஜ் தான் முதல

கடலோரக் கவிதைகள் படத்தில் வரும் "பள்ளிக் கூடம் போகாமலே.. பாடம் ஏதும் படிக்காமலே.. பாஸ் பாஸ் நீ இப்ப பாஸ்.. தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ்" என்ற பாடல் தான் மான் கராத்தேவுக்கு முன்பே இதை கணித்ததாகவும் இந்த விசயத்தில் சிவகார்த்திகேயனுக்கு சீனியர் சத்யராஜ் தான் என்றும் இன்னொரு கூட்டமும் அட்ராசிட்டி செய்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X