விஜய் சேதுபதியின் 10 ஆண்டு திரை பயணம்.. காமன் டிபி வெளியிட்டு ரசிகர்கள் கொண்டாட்டம்!
சென்னை: விஜய் சேதுபதி தென் மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Recommended Video

அதற்கு முன்னர் சின்ன திரையிலும், துணை நடிகராகவும் நடித்து வந்தவர் நடிகர் விஜய் சேதுபதி.
இன்றோடு விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தடம் பதித்து 10 ஆண்டுகள் நிறைவடைவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் சேதுபதி - தி இன்ஸ்பிரேஷன்
வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த விஜய் சேதுபதி தென் மேற்கு பருவகாற்றில் அறிமுகமாகி பின்னர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களின் மூலம் ரசிகர்களை கவர ஆரம்பித்தார். பின்னர் குறுகிய காலத்தில் நிறைய படங்களில் நடித்து வெற்றியும் பெற்று இன்று தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக திகழ்கிறார்.

மக்கள் செல்வனாக விஜய் சேதுபதி
ரசிகர்களை விஜய் சேதுபதி மதிக்கும் விதம், அவர்களை அன்போடு அணைத்து கன்னத்தில் முத்தமிடுவது போன்ற செயல்களால் பெரிதாக ரசிகர்களிடத்தில் விரும்பப்பட்டார். அது மட்டுமன்றி மக்களுக்காக சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க தொடங்கிய பின்னர் நடிகர் விஜய் சேதுபதி மக்கள் செல்வன் விஜய் சேதுபதியாக அவதரித்தார்.

உச்சகட்ட மாஸ்
தனி வழியில் சென்று கொண்டிருந்த விஜய்சேதுபதி தற்போது பெரிய நடிகர்களுக்கு வில்லனாக தொடர்ந்து நடித்து வருகிறார். மாதவன், ரஜினியை தொடர்ந்து விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் வில்லத்தனம் ரசிகர்களுக்கு உச்சகட்ட மாஸாக தெரிய அதையும் தொடர்ந்து வரவேற்று வருகின்றனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தடம் பதித்து 10 ஆண்டுகள் நிறைவடைவதை ரசிகர்கள் ட்விட்டரில் #DecadeRulerMakkalSelvan என்னும் ஹாஸ்டேக் மூலம் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நடிகர்களும், இயக்குனர்களும் ரசிகர்களுக்கான காமன் டிபியை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











