எவ்ளோ லவ் படம் வந்தாலும்… எங்களுக்கு மட்டும் ஏன் விண்ணைத்தாண்டி வருவாயா புடிக்குது? #10YearsOfVTV

சென்னை: இயக்குநர் கெளதம் மேனனின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Recommended Video

GVM magics in Cinema | HBD Gautam Menon | GVM movies vs reality

கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் படங்கள் வெளியாகி இருந்தாலும், இன்னமும் தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் ரொமான்டிக் படமாக விண்ணைத்தாண்டி வருவாயா இடம்பிடித்து இருக்கிறது.

ஏ.ஆர். ரஹ்மானின் இசை, சிம்பு, த்ரிஷா நடிப்பு, கெளதம் மேனனின் வித்தியாசமான ஸ்க்ரீன் பிளே என ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட் கொடுத்தது இந்த படம்.

விண்ணைத் தாண்டி வருவாயா

விண்ணைத் தாண்டி வருவாயா

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா, விடிவி கணேஷ் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வெளியான படம் விண்ணைத் தாண்டி வருவாயா. இந்து பையனுக்கும், கிறிஸ்தவ பெண்ணுக்கும் இடையே உருவாகும் காதல், அதனை தொடர்ந்து வரும் பிரச்சனைகளை சினிமா ஆங்கிளில் கெளதம் மேனன் படமாக்கி இருந்தார்.

10 ஆண்டுகள் நிறைவு

காதல் காவியமாக வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி, இன்றுடன் பத்து ஆண்டுகள் ஆகின்றன. கெளதம் மேனனின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இன்று, விண்ணைத்தாண்டி வருவாயா பத்து ஆண்டுகளை நிறைவு செய்ததை ரசிகர்கள் ட்விட்டரில் #10YearsOfVTV ஹாஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

டைட்டில் ஸ்கெட்ச்

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் டைட்டில் டிராக்கே வித்தியாசமான ஸ்கெட்ச்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கேரளாவின் பேக் வாட்டர் பின்னணியில் படத்தின் டைட்டில் மற்றும் சிம்பு, திரிஷா, கெளதம் மேனன், ஏ.ஆர். ரஹ்மான் பெயர்கள் வருவதே வித்தியாசமான தொடக்கம் ஆக இருந்தது.

செம புரபோஸ்

கடந்த பத்து ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில், சிறந்த புரபோஸல் காட்சி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தான் இடம்பெற்றுள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். விண்ணைத்தாண்டி வருவாயா வீடு, ஜெஸ்ஸி, ப்ளூ சாரி, கேரள வாசம், சிம்புவின் ஹேண்ட்ஸம் ஆன லுக் என படத்தில் பல பிளஸ்கள் இருந்தன.

ஹேட்டர்களே இல்லை

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு தமிழ் சினிமாவின் அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் ரசிகர்கள் தான். அந்த படத்திற்கு ஹேட்டர்களே இல்லை என இந்த ரசிகர் வித்தியாசமான படத்தின் ஸ்கெட்ச் புகைப்படத்துடன் ட்வீட் போட்டுள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா வெளியாகி 10 வருஷம் ஆகி உள்ளதை ரசிகர்கள் ஆத்மார்த்தமாக கொண்டாடி வருகின்றனர்.

காதல் வலி

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில், சிம்பு, திரிஷா லவ் பண்ணும் காட்சிகளை விட, கடைசியில் அவர்கள் பிரிந்து போகும் காட்சி பல இளைஞர்களுக்கு, காதல் வலி எப்படி இருக்கும் என்பதை சிம்புவின் கண்கள் வழியாக உணர்த்தியது. நடிகர் சிம்பு நடித்த படங்களிலேயே, அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு பாராட்டப்பட்ட படமும் இந்த படம் தான்.

ஏ.ஆர். ரஹ்மான் இசை

கெளதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா படம் மிகப்பெரிய வெற்றியை பெற பெரிய பலமாக இருந்தது ஏ.ஆர். ரஹ்மானின் இசை தான். ஒசானா, மன்னிப்பாயா, விண்ணைத்தாண்டி வருவாயா, கண்ணுக்குள் கண்ணை, ஆரோமலே என ஒவ்வொரு பாட்டும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக இன்றளவும் இருக்கிறது.

இது தான் என் வாழ்க்கை

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில், சிம்பு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல், கடைசி வரைக்கும், திரிஷாவை நினைத்துக் கொண்டு, அவங்களுடைய காதலை படமாக இயக்கி இருப்பார். விடிவி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை போல, இந்த நெட்டிசனின் வாழ்க்கையும் இருப்பதாக ட்வீட் போட்டுள்ளார்.

ஜெஸ்ஸி vs ஜானு

ஜெஸ்ஸி vs ஜானு

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜெஸ்ஸியாக நடித்து, தமிழ் ரசிகர்களை கவர்ந்த திரிஷா, பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்த 96 படத்தில் ஜானுவாக நடித்து அசத்தி இருந்தார். ஜெஸ்ஸியா? ஜானுவா? எந்த கதாபாத்திரம் சூப்பர் என்ற கேள்விக்கு? ஒரே மாதிரியான காதலை வெளிப்படுத்திய ஜானுவை விட ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு வித்தியாசமான அனுபவத்தை தந்த ஜெஸ்ஸி தான் சூப்பர் என்றே சொல்லத் தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X