வேலைக்கார சிறுமி கற்பழிப்பு: கைதாகிறார் ஆவாரம்பூ நடிகை!

ஆவாரம் பூ உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நந்தினி (வயது 38). இவரது கணவர் பாபு கிருஷ்ணன் (42). ஆணை படத்தில் வில்லனாக இவர் நடித்துள்ளார். ஆஸ்டெக் என்ற சாப்ட்வேர் நிறுவனத்தின் பங்குதாரராகவும் உள்ளார். இவர்களது வீடு சென்னை சூளைமேடு கில் நகர் வினோபாஜி தெருவில் உள்ளது.
இவர்கள் தங்கள் வீட்டு வேலைக்கு, ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் அனுகு பகுதியை சேர்ந்த துளசியம்மாள் என்பவர் மூலம் சில ஏழைச் சிறுமிகளை வரவழைத்திருந்தனர்.
பவானி (15), குமாரி (10) ஆகிய 2 சிறுமிகளை மாதம் ரூ.1,500 சம்பளத்துக்கு நடிகை நந்தினி வீட்டில் வேலைக்காக சேர்த்து விட்டார் துளசியம்மாள்.
அங்கு ஒரு வருடமாக வேலை பார்த்த சிறுமிகளுக்கு பல விதத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து கடந்த மாதம் 17ம் தேதி பவானி, நடிகையின் வீட்டில் இருந்து தப்பினார். அருகில் உள்ள பான்யன் சமூக தொண்டு நிறுவனத்தில் தஞ்சமடைந்தார். அவரை மீட்டு எமரால்டு குழந்தைகள் நல ஆணையத்திடம் தொண்டு நிறுவனத்தினர் ஒப்படைத்தனர்.
குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதாக நடிகை மற்றும் அவரது கணவர் மீது போலீசில் புகார் தரப்பட்டது.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் நடிகையின் வீட்டில் இருந்து குமாரி என்ற சிறுமியையும் 14 வயது சிறுவனையும் மீட்டனர்.
இந் நிலையில் குழந்தைகள் நல ஆணையத்தில் உள்ள மனோதத்துவ நிபுணர் அன்பரசன் சிறுமி பவானியிடம் விசாரணை நடத்தினார், அப்போதுதான் நடிகை வீட்டில் நடந்த கொடூர சம்பவங்கள் தெரிய வந்தன.
கடந்த மே மாதம் நடிகை வீட்டில் இல்லாத நேரத்தில் அங்குள்ள காவலாளி சக்கரபாணி (வயது 38) என்பவர் தன்னை கட்டி போட்டு கற்பழித்ததாகவும் இது போல் 6 முறை நடந்த்தாகவும், நடிகையும் அவரது கணவரும் தங்களை சிறுமிகள் என்றும் பாராமல் வீட்டிற்குள் அடைத்து வைத்து அடித்து உதைத்து சித்ரவதைகள் செய்ததாகவும் சிறுமி பவானி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து சூளைமேடு போலீசார் காவலாளி சக்கரபாணியை நேற்று காலை கைது செய்தனர்.
நடிகை நந்தினி, பாபுகிருஷ்ணன் ஆகிய 2 பேர் மீதும் சிறுமிகளை அடைத்து வைத்தல், வன்முறையாக தாக்கி காயம் ஏற்படுத்துதல், குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்துதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது
நந்தினி பல வருடங்களுக்கு முன் செண்பகா என்ற பெயரில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











