நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு ஆபாச மிரட்டல்!

By Staff

நகைச்சுவை நடிகர் போண்டா மணியை தொடர்ந்து இடைவிடாமல் செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக திட்டியும், கொலை செய்யப் போவதாகவும் மிரட்டிய நபரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

போண்டா மணி என்கிற ஜெயமணி, தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு காமெடிக் காட்சிகளில் நடித்து வருபவர். வடிவேலு உள்ளிட்ட பெரிய நடிகர்களின் காமெடிக் குழுவில் இடம் பெற்றிருப்பவர்.

இன்று போண்டா மணி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனக்கு நேற்று இரவு 8 மணி முதல் ஒருவ நபர் செல்போன் மூலம் இடைவிடாமல் தொடர்ந்து ஆபாசமாக பேசி தொல்லை தருகிறார். கேவலமாக திட்டுகிறார்.

திடீரென என்னைக் கொல்லப் போவதாக கூறுகிறார். அவரது பெயரைக் கேட்டபோது மாதேஷ் என்றார். நள்ளிரவு 1 மணிக்கும் கூட போன் செய்து திட்டினார்.

அந்த நபரின் செயலால் பெரும் டென்ஷனாகியுள்ளது. மதுரையில் நடக்கவிருந்த ஷூட்டிங்கிலும் கூட என்னால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

அந்த நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க அடையார் போலீஸாருக்கு ஆணையர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அந்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

யாருப்பா அது...? பாவம்பா நம்ம மணி...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X