அரசியல் ஆசை இல்லை - சூழ்நிலைக்கேற்ப என் நடவடிக்கை மாறும் - அஜீத்

By Staff

Ajith
எனக்கு அரசியலில் ஆர்வமில்லை, ஆனால் சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வேன் என நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார்.

அஜீத் ரசிகர் மன்றத்துக்கு சென்னை சாலிகிராமத்தில் தலைமை அலுவலகம் உள்ளது.

சமீப காலமாக தனது ரசிகர் மன்றங்களை தானே முன்நின்று முறைப்படுத்தி வருகிறார் அஜீத்.

தனது பிறந்த நாளின்போது மரக்கன்றுகள் நட வேண்டும் என்று அறிவுறுத்தி அப்பணிகளை தொடர்ந்து செய்ய வைத்து வருகிறார்.

ரத்த தானம், ஏழைகளுக்கு உதவி வழங்குதல் போன்ற காரியங்களிலும் அவரது ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்களாம். இன்னொருபுறம் ரசிகர் மன்றத்துக்கு புதிய உறுப்பினர் சேர்ப்பும் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.

விஜய் விரைவில் அரசியலுக்கு வர இருப்பதால் அஜித்தும் அரசியல் கட்சி துவங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து அஜீத் சமீபத்தில் அளித்த பேட்டி:

எனது ரசிகர் மன்றங்களை சீர்படுத்தும் பணிகளில் இறங்கி இருக்கிறேன். ரசிகர்களோடு நேரடியாக தொடர்பு அவசியம் அதற்காகத்தான் இந்த காரியத்தை செய்கிறேன்.

ரசிகர் மன்றத்தை சீரமைப்பதால் நானும் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று வதந்தி கிளம்பியுள்ளது.

எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை. கால மாற்றத்தில் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி நடவடிக்கைகளும் மாறுபடும்.

என்னைப் பற்றி யாராவது தவறான கருத்துகள் வெளியிட்டால் முன்பெல்லாம் ஆவேசப்பட்டு வந்தேன். இப்போது இந்த மாதிரி செய்திகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதுமில்லை, அவற்றுக்கு விளக்கம் கொடுப்பதுமில்லை. எனவே மன அழுத்தம் இல்லாமல் இருக்கிறேன்...என்றார் அஜீத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X