அரவிந்த் சாமி - காயத்ரிக்கு விவாகரத்து வழங்கப்பட்டது!

By Chakra

Aravind Samy
பிரபல நடிகர் அரவிந்த் சாமிக்கும் அவர் மனைவி காயத்ரி என்ற கவிதாவுக்கும் நேற்று விவாகரத்து வழங்கப்பட்டது.

ரோஜா, தளபதி, மின்சார கனவுகள் போன்ற படங்களில் நடித்தவர் அரவிந்தசாமி. இவருக்கும் காயத்ரி என்ற பெண்ணுக்கும் 1994-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆதிரசுவாமி, ருத்ரசாமி என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2003 முதல் பிரிந்து வாழ்ந்தனர். ஆனால் குழந்தைகளும் இருவரும் அரவிந்தசாமியிடம் வசித்தனர்.

2006-ல் அரவிந்தசாமியிடம் இருந்து விவாகரத்து கேட்டு காயத்ரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அரவிந்தசாமி மனுதாக்கல் செய்தார்.

அப்போது குழந்தைகளின் நலன் கருதி இருவரும் சேர்ந்து வாழ முயற்சிக்கும்படி நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

இதையடுத்து காயத்ரி விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார். அதன் பின்னரும் இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்தனர். சேர்ந்து வாழும் வாய்ப்பு ஏற்பட வில்லை. இதையடுத்து இருவரும் பரஸ்பர முறையில் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை குடும்ப நல கோர்ட்டு முதன்மை நீதிபதி மீனாட்சி சுந்தரம் விசாரித்து அரவிந்தசாமி, காயத்ரி ஆகிய இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.

குழந்தைகள் நலன் மற்றும் காயத்ரியின் செலவுக்காக மாதம் ரூ 1 லட்சம் தர அரவிந்த்சாமி ஒப்புக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X