சினிமா கலைஞர்களுக்கு பிரதிதித்துவம்! - பாரதிராஜா வலியுறுத்தல்

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தொடங்கி 40-ஆண்டுகள் ஆனதையொட்டி, சென்னையில், வருகிற 23-ந் தேதி, மிகப் பிரம்மாண்டமான விழா நடைபெற இருக்கிறது.
இது பற்றி இயக்குநர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், " தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவதற்காக இந்த விழா நடைபெறுகிறது.
விழாவையொட்டி வருகிற 23-ந் தேதி தமிழ் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
சினிமாவை ஒரு தொழிலாக அங்கீகரிக்கவேண்டும். சினிமா கலைஞர்களுக்கு மத்திய-மாநில அரசுகளில் பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும். எஸ்.எஸ்.வாசன், ஸ்ரீதர் போன்ற சாதனையாளர்களுக்கு தபால்தலை (ஸ்டாம்பு) வெளியிட வேண்டும்..." என்றார்.
Comments
சினிமா கலைஞர்கள் பாரதிராஜா பிரதிநிதித்துவம் மத்திய மாநில அரசுகள் bharathi raja cinema directors association union govt


Click it and Unblock the Notifications