லாடம் தடை நீங்குமா?

லீ படத்தைக் கொடுத்த பிரபு சாலமோன் இயக்கியுள்ள புதிய படம் லாடம். சார்மி முழு நீள கவர்ச்சியில் நடித்துள்ளார். புதுமுகம் அரவிந்த் நாயகனாக நடித்துள்ளார்.
படம் முடிந்து ரிலீஸுக்குத் தயாராகி விட்டது. இந்த நிலையி்ல தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம் படத்தை திரையிட இடைக்காலத் தடை விதித்தது.
இதை நீக்கக் கோரி லாடம் படத் தயாரிப்பாளர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தயாரிப்பாளர் குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சங்கர், சோழா பொன்னுரங்கத்திற்கு பாக்கி வைத்துள்ள ரூ. 50 லட்சத்தைக் கொடுத்து விடுவதாகவும், படத்தைத் திரையிட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் கோரினார்.
பண பாக்கி இல்லை என்று சோழா பொன்னுரங்கம் சான்றிதழ் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அப்படியே வாங்கித் தருவதாக சோழா பொன்னுரங்கத்தின் வக்கீல் உறுதியளித்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை 20ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


Click it and Unblock the Notifications











