விவேக்குக்காக கவுண்டர் சமூகத்திடம் தனுஷ் மன்னிப்பு!

தனுஸ் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள படம் உத்தமபுத்திரன். இந்தப் படத்தில் காமெடியனாக நடித்துள்ள விவேக், கவுண்டர் சமூகத்தினர் குறித்து மோசமாக கமெண்ட் அடித்துள்ளதாகக் கூறி கொங்கு வேளாளர் முன்னேற்றக் கழகம் கோவை மற்றும் சேலம் பகுதிகளில் பெரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது.
இதன் காரணமாக கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் உத்தமபுத்திரன் திரையிடுவதை நிறுத்தி வைக்குமாறு அம்மாவட்டங்களின் ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் படத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிடுவதாக தயாரிப்பாளர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தில் விவேக் பேசிய வசனத்துக்காக கவுண்டர் சமூக மக்களிடன் தான் மன்னிப்புக் கோருவதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும், சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய அந்த வசனம் தங்களுக்கே தெரியாமல் இடம்பெற்று விட்டதாகவும், தயவு செய்து படத்தை ஓட விடுங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











