டிம்பியின் அரை குறைப் படங்கள் ரிலீஸ்!

என்டிடிவி இமேஜின் தொலைக்காட்சி நடத்திய சுயம்வரம் மூலம் கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் அழகி டிம்பி கங்குலியைக் கைப்பிடித்தார் ராகுல். இருவரும் சந்தோஷமாக குடித்தனத்தை ஆரம்பித்த நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு, தன்னை ராகுல் மகாஜன் அடித்து விட்டார், முகத்தில் குத்தி விட்டார், தலை முடியைப் பிடித்து இழுத்தார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் டிம்பி.
மேலும் ராகுல் மகாஜன் வீட்டைவிட்டு வெளியேறி அவரது சகோதரி வீட்டுக்குப் போய் விட்டார். பின்னர் வீட்டுப் பெரியவர்கள் இருவரையும் சமரசப்படுத்தி மீண்டும் சேர்த்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஒரு ஹோட்டலில் நடந்த பார்ட்டியின்போது நீச்சல் உடையில் படு கவர்ச்சிகரமாக டிம்பி போஸ் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
அதில் படு கவர்ச்சியாக காணப்படுகிறார் டிம்பி. கையில் மதுப் புட்டியுடன் சிலருடன் படு நெருக்கமாக நின்றபடி காணப்படுகிறார். இந்த புகைப்படங்கள் கடந்த ஆண்டு எடுக்கப்பட்டவையாகும்.
இந்தப் புகைப்படங்கள் காரணமாக டிம்பிக்கும், ராகுலுக்கும் இடையிலான பிரச்சினை மேலும் பெரிதாகுமோ என்று ராகுல், டிம்பி தரப்பினர் அஞ்சுகின்றனராம்.


Click it and Unblock the Notifications