விநியோகஸ்தர்கள் Vs தியேட்டர் உரிமையாளர்கள்

By Sudha

பட்டாபட்டி விழாவில் விநியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மோதல்

மக்கள் சினிமா பார்க்க வராமல் போகக் காரணம் திரையரங்குகளில் வைத்து விற்கப்படும் அதிகபட்சக் கட்டணம்தான் என்று விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன் கூறினார்.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம், சினிமா கட்டணத்தைக் குறைத்தால் தியேட்டர்காரர்கள் என்ன ஆவது? எங்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் இருக்கு என்றார்.

கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் கதாநாயகனாக நடித்துள்ள 'பட்டாப்பட்டி' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. விழாவுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் தலைமை தாங்கி, பாடல்களை வெளியிட்டு பேசினார்.

அவர் பேசும்போது, சினிமாவை ஒரு தொழிலாக அங்கீகரிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று இங்கே பேசிய வெங்கட்ரமணி கேட்டுக்கொண்டார். இதுபற்றி மத்திய-மாநில அரசுகளிடம் பேசப்படும் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.

அடுத்து பேச வந்த வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் 'கலைப்புலி' ஜி.சேகரன் கூறியதாவது:

"ராம.நாராயணன் 'குட்டிப்பிசாசு' என்ற படத்தை 3 மொழிகளில் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இந்த படம் வெள்ளி, சனி, ஞாயிறு நன்றாக வசூல் செய்தது. திங்கட்கிழமையில் இருந்து வசூல் எப்படி இருக்குமோ என்ற படபடப்பில் இருக்கிறார், ராம.நாராயணன். அந்த படபடப்பு வினியோகஸ்தர் என்ற முறையில் எனக்கும் இருக்கிறது.

தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. அதற்கு தொலைக்காட்சியும் ஒரு காரணம். தொலைக்காட்சி, விஞ்ஞான வளர்ச்சியின் அங்கம். அதை ஒன்றும் செய்ய முடியாது. அதனுடன் போட்டிபோடும் வகையில், படங்களைத் தயாரிக்க வேண்டும்.

சமீபத்தில் 4 படங்கள் திரைக்கு வந்துள்ளன. ஒவ்வொரு படம் திரையிட்ட தியேட்டர்களிலும் 50 பேர் அல்லது 60 பேர்கள்தான் இருக்கிறார்கள். சினிமா, ஒரு கஷ்டமான சூழ்நிலையில் உள்ளது.

தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதால்தான் ஜனங்கள் தியேட்டருக்கு வர மறுக்கிறார்கள். எனவே, நகர் சார்ந்த பகுதிகளில் சின்ன படங்களை திரையிடும் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைத்தால், ஜனங்கள் தியேட்டர்களுக்கு வர ஆரம்பிப்பார்கள்...,'' என்றார்.

தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு

அடுத்து பேச வந்த திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் , சேகரன் கருத்தை கடுமையாக எதிர்த்தார்.

"சின்ன படம், பெரிய படம் என்று பிரித்து பார்க்கக் கூடாது. படத்தின் வசூலை வைத்துதான் சின்ன படம், பெரிய படம் என்பதை முடிவு செய்ய வேண்டும். ரூ.30 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட படம், ரூ.15 கோடி கூட வசூல் செய்வதில்லை. ஒரு கோடி ரூபாயில் தயாரிக்கப்படும் படம், பத்து கோடி வசூல் செய்கிறது. அப்படியானால், எது பெரிய படம்? எது சின்ன படம்?

மினிமம் கியாரண்டியை நீக்குங்கள்!

வினியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் 'மினிமம் கியாரண்டி' என்ற முறையை தவிர்த்தால், எல்லா படங்களையும் நாங்கள் 175 நாட்கள் ஓட்டி காட்டுகிறோம். தியேட்டர் கட்டணத்தை இருபது ரூபாய் என்றும், முப்பது ரூபாய் என்றும் குறைத்தால், தியேட்டர் உரிமையாளர்களான நாங்கள் எங்கே போவது? எங்களுக்கும் குடும்பம், பிள்ளைகள் இருக்கிறார்கள்.

திரையுலகை சேர்ந்த அனைவரும் கூடி, இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்..,'' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X